ETV Bharat / city

ஆபத்தான தொழிற்சாலைகள் நவீன கேமரா மூலம் கண்காணிப்பு- சி.வி. கணேசன்

author img

By

Published : Sep 4, 2021, 7:12 PM IST

பேராபத்துகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நவீன கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

CV Ganesan
CV Ganesan

சென்னை : பேராபத்துகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நவீன கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சி.வி. கணேசன் பதிலுரைத்தார். அந்த பதிலுரையில், “கரோனா தொற்றின் 2ஆவது அலை உச்சத்தில் இருந்ததை குறைத்து மக்களை காக்கும் பணியை சிறப்பாக செய்த முதலமைச்சரை நீதிமன்றமே பாராட்டியுள்ளது.

நம்முடைய தொழிலாளர்கள் சிற்பம், வீட்டு உபயோகப் பொருள்கள் செய்தல் என பல்வேறு வகையில் உலக அளவில் திறமையை நிரூபித்துள்ளனர். தொழில் துறையில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

கட்டடம், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், பூங்கா அமைத்தல், வாகனம் தயாரிப்பு உள்ளிட்டவைகளை உருவாக்க உழைத்தவர்கள் பெயரில்லை என்றாலும் அவர்களின் வியர்வை வாசம் அதில் இருந்துகொண்டு தான் இருக்கும்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்தது திமுக தான். பஞ்சு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க 187ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கென்று தனியாக 15 நல வாரியங்களை அமைத்து கொடுத்தது திமுக தான்.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 2லட்சம் பேருக்கு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக சுமார் 75 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே நாளில் 50ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. கரோனா காலத்தில் வேலையிலந்த, குடும்ப அட்டையில்லாத வெளி மாநில தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 1 லட்சத்து 29 ஆயிரத்து 444 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி,14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டது.

மத்திய அரசானது நெய்வேலி என்.எல்.சி, திருச்சி பெல் உள்ளிட்டவைகளில் வேலைக்கு 80 சதவீத ஆள்களை தேர்வு செய்யும்போது தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேராபத்தை ஏற்படுத்தும் 150 தொழிற்சாலைகளை நவீன கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்படுகிறது.

மாநிலத்தில் இயங்கி வரும் 90 அரசு தொழிற்பயிற்சி மையமும், 489 தனியார் தொழிற்பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. அதில் பயிலும் சுமார் 35ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் கருணாநிதி.

அந்த 90அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் பழுது நீக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலமாக சுமார் 10லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட சுமார் 200கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு செல்வோர் கண்டிப்பாக "மேன் பவர் கார்ப்பரேசன்" என்பதில் பதிந்திருக்க வேண்டும். குவைத்,துபாய், இங்கிலாந்து, அமெரிக்க போன்ற அயல்நாட்டில் பணிபுரிவதற்காக இளைஞர்களுக்கு கைபேசி செயலி, ஆலோசனையாளர் என்று நியமிக்கப்படுவார்கள்.

தொழிலாளர்கள் மருத்துவத்திற்காக அமைக்கப்பட்ட 223 இ.எஸ்.ஐ மருந்தகங்கள், 10 இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவைகளோடு, சிவகாசி, திருச்சியில் சித்தா மருத்துவமனையும் தொடங்கப்படும்.

தொழிலாளர் நலனுக்காக திருச்சி ,நெல்லை ராணிப்பேட்டை ஆகிய இடங்களுக்கு 3 மண்டல நிர்வாக மருத்துவ பணியாளர்கள்,87 இதர பணிகளுக்கு பதிவு செய்து பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மதுரையில் காந்தி அரையாடைத் துறந்து 100 ஆண்டுகள் நிறைவு; இதற்கான விழாவில் தேசப்பிதாவின் பேத்தி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.