ETV Bharat / city

ராம்குமார் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை!

author img

By

Published : Dec 1, 2021, 4:53 PM IST

ராம்குமார் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு தடை
ராம்குமார் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு தடை

ராம்குமார் சிறை மரணம் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், அலுவலகம் செல்வதற்காகக் காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை அடையாளம் தெரியாத நபரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

ராம்குமாரின் தந்தை புகாரின் அடிப்படையில் விசாரணை

இதனையடுத்து, புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இந்த வழக்கு குறித்து, ராம்குமாரின் தந்தை பரமசிவம் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது.

உயர் பாதுகாப்புப் பிரிவு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார்

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மத்திய சிறைச்சாலையின் சிறை கண்காணிப்பாளராக இருந்த ஆர்.அன்பழகன் (ஓய்வுபெற்ற சூப்பிரண்டு) வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் சுவாதி கொலை வழக்கு குறித்துச் சுட்டிக் காட்டியுள்ள அவர், "கைது செய்யப்பட்ட ராம்குமார் உயர் பாதுகாப்புப் பிரிவு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

சுவாதி படுகொலை வழக்கு
ராம்குமார் சிறை மரணம்

எய்ம்ஸ் மருத்துவர் தலைமையில் பரிசோதனை

நீர் குடிப்பதற்காக வெளியே வந்தவர் அங்குள்ள மின்சார சுவிட் பாக்ஸை, உடைத்து வயரைப் பிடித்து தற்கொலைக்கு முயன்று, பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ராம்குமாரின் உடல் எய்ம்ஸ் மருத்துவர் தலைமையில், பரிசோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி தான் ராம்குமார் இறந்தார்

அந்த அறிக்கையில், மின்சாரம் தாக்கி தான் அவர் இறந்தார் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்குள் தான் தன்னிச்சையாக மனித உரிமை ஆணையம் வழக்குத் தொடர முடியும். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரிக்க முடியாது" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தன்னிச்சையாக விசாரித்து வருகிறது

மேலும், ஏற்கெனவே இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்குத் தொடர்ந்து, விசாரித்து வருவதாகவும்; இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கல்யாணசுந்தரம், சிவஞானம் அமர்வு மாநில மனித உரிமை ஆணையம், ராம்குமார் வழக்கை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மனித உரிமை ஆணையப் பதிவாளர் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ராம்குமார் உடலில் இருந்தது மின்காயங்களே.. உடற்கூராய்வை கண்காணித்த மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.