ETV Bharat / business

உலகச் சந்தைகளை உலுக்கி எடுத்த அமெரிக்க பணவீக்கம்

author img

By

Published : Feb 11, 2022, 8:23 PM IST

Updated : Feb 11, 2022, 9:32 PM IST

வரலாறு காணாத வீழ்ச்சி
வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க பங்குச் சந்தைகளின் வரலாறு காணாத வீழ்ச்சியால் பங்குச் சந்தைகள் அதல பாதாளத்திற்கு சென்றன.

திருச்சி: நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு... என்னாச்சு என உச் உச் உச் கொட்டினர் உலக பங்குச்சந்தை வர்த்தகர்கள். பின்னர்தான் தகவல் வந்தது அமெரிக்க பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி என்ற தகவல். அமெரிக்க பங்குச் சந்தைகள் அதல பாதாளத்திற்கு சென்றன. காரணம் நாற்பது ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் என வெளியான தகவல். இதனைத் தொடர்ந்து ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட இந்திய சந்தைகளையும் தொற்றிக் கொண்டது.

வாரத்தின் கடைசி நாள் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 773 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 231 புள்ளிகள் சரிந்தும் நிறைவு செய்தன. ஐ.ஓ.சி, ஐ.டி.சி, என்.டி.பி.சி, இந்துசிண்ட் வங்கி, டாடா ஸ்டீல்ஸ் ஆகியன சொற்ப உயர்வு கண்டன.

தென்னை மரத்துல தேள் கொட்டினால் பனை மரத்துல நெறி கட்டுச்சாம் என்கிற கதையாக அமெரிக்க பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அனைத்து பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ள சந்தை நிபுணர்கள், இதனை வாய்ப்பாக கருதி சிறுக சிறுக முதலீட்டை தொடர வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை

Last Updated :Feb 11, 2022, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.