ETV Bharat / sports

KKR VS RR ஆட்டம் ரத்து.. எலிமினேட்டரில் பெங்களூரு - ராஜஸ்தான் மோதல்! - kkr vs rr

author img

By ANI

Published : May 19, 2024, 10:51 PM IST

Updated : May 19, 2024, 10:58 PM IST

KKR VS RR: கொல்கத்தா - ராஜ்ஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

KKR VS RR IPL Match 2024
KKR VS RR IPL Match 2024 (Credit: ANI)

கவுகாத்தி: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. 7.00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மழையின் காரணமாக தொடங்காமல் இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்பு மழை நின்றவுடன் மைதானத்தை தயார் செய்து விட்டு டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மழையின் காரணமாக இப்போட்டி 7 ஓவராக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் மழை தொடங்கியது. இதன் காரணமாக தற்போது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், எலிமினேட்டரில் பெங்களூரு அணியும் - ராஜஸ்தான் அணியும் மோதும். குவாலிபையர் 1-ல் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதும்.

இதையும் படிங்க: எலிமினேட்டர், குவாலிபையர் 1-ல் மோதப்போவது எந்த அணிகள்? KKR Vs RR போட்டி ரத்தானால் என்ன ஆகும்? - Kkr Vs Rr

Last Updated : May 19, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.