ETV Bharat / bharat

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!

author img

By

Published : Jun 6, 2022, 7:09 AM IST

சென்னையில் 16ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.

பெட்ரோல்
pet

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதில், கடந்த 15 நாள்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும் , டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றும் (ஜூன் 6) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 96.72க்கும், டீசல் ரூ 89.62க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ 111.35க்கும், டீசல் ரூ 97.28க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ 106.03க்கும், டீசல் ரூ 92.76க்கும் விற்பனையாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.