ETV Bharat / bharat

2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் ஒரு அலசல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 4:44 PM IST

Rajasthan Assembly Elections 2023 Round Up
2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் ஒரு அலசல்!

Rajasthan Assembly Election 2023: ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகளில் 199 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகளில் 199 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதியில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, காலை 9 மணி நிலவரப்படி 9.77 சதவீத வாக்குகள் பதிவாகியது. 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீத வாக்குகள் பதிவாகியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.27 சதவீத வாக்குகளும், 3 மணி நிலவரப்படி 55 புள்ளி 63 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாக்களித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் கூறும் போது, "1952 முதல் தற்போது வரை ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. இவ்வளவு பெரிய அளவில் நியாயமான தேர்தல் நடத்திய இந்தியத் தேர்தல் ஆணையத்தை வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  • VIDEO | "From 1952 to the present time, the voting percentage has increased in every election, this has strengthened our democracy. I congratulate the Election Commission of India for conducting fair polls on such a large scale," says Lok Sabha Speaker @ombirlakota as he arrives… pic.twitter.com/JDYaQ69Gyn

    — Press Trust of India (@PTI_News) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜெய்ப்பூரில் டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறும் போது, "ராஜஸ்தான் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். தேர்தலுக்காகப் பலத்த பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் உள்ளனர்." என தெரிவித்தார்.

  • #WATCH | Rajasthan Election | Jaipur: DGP Umesh Mishra says, "I would say that it's a festival of democracy, and people should actively participate in it. One should exercise one's right to vote freely and fearlessly... There's tight security... Our officers and flying squad are… pic.twitter.com/mX5olAySO8

    — ANI (@ANI) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பாஜக வாக்குச் சாவடி முகவர் தேர்தல் நடைபெறும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சுமேர்பூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 47ஆம் எண் வாக்குச் சாவடி முகவராக இருந்த சாந்தி லால் திடீர் என மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் சாந்தி லால் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் முகவர் சாந்தி லால்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • #WATCH | Rajasthan Elections | State Congress president Govind Singh Dotasra says, "There is enthusiasm for Congress in the entire state. People are voting with joy. With the kind of work done by Congress and the guarantees given by the party, there is zeal. The management done… pic.twitter.com/p1y9IdNPxX

    — ANI (@ANI) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த சிங் தோதாஸ்ரா கூறும் போது, "ராஜஸ்தான் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் செயல்பாடுகள் குறிப்பாக கரோனா காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் அரசு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சர்தார்புரா பகுதி வாக்குச்சாவடியில் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும் போது, "பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் பொருள் இல்லை என்றும் இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்; 40.27 சதவீத வாக்குகள் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.