ETV Bharat / bharat

சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்!

author img

By

Published : Sep 28, 2021, 9:03 AM IST

PM to dedicate 35 crop varieties to nation on Tuesday
சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்!

பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.

டெல்லி: பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டைச் சவால்களை எதிர்கொள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலால் சிறப்பு பண்புகளைக் கொண்ட பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட 35 பயிர் வகைகளை இன்று(செப். 28) பிரதமர் மோடி காணொலி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய இத்திட்டம் மத்திய, மாநில வேளாண்ப் பல்கலைக்கழகங்கள் மூலமாக அறிமுகப்படுத்ததப்பட உள்ளது.

ராய்ப்பூரில் தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனத்துக்கு புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை பிரதமர் மோடி வழங்குவதுடன், விவசாயத்தில் புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுடன் உரையாடுகிறார்.

இதையும் படிங்க: உணவுக் கழிவிலிருந்து மின்சாரம்: பிரதமர் மோடியின் பாராட்டு மழையில் சிவகங்கை ’காஞ்சிரங்கால்’ கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.