ETV Bharat / bharat

'நவீனை உயிருடன் அழைத்துவர முடியவில்லையே'- மனம் வெதும்பிய கர்நாடக முதல் அமைச்சர்!

author img

By

Published : Mar 21, 2022, 1:00 PM IST

Updated : Mar 21, 2022, 2:31 PM IST

Basavaraj Bommai
Basavaraj Bommai

உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீன் சேகரப்பா உடல் திங்கள்கிழமை (மார்ச் 21) பெங்களூரு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். அப்போது நவீனை உயிருடன் அழைத்துவர முடியவில்லை என முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை மனம் வெதும்பினார்.

பெங்களூரு: ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகிறது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவீச்சில் மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார்.

உக்ரைனில் உள்ள கார்கிவ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Kharkiv Medical University) மூன்றாம் ஆண்டு படித்துவந்தவர் நவீன் சேகரப்பா கியானாகவுடர் (Naveen Shekarappa Gyanagoudar). இவர் மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று (மார்ச் 21) காலை பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தடைந்தது.

அவரது உடலுக்கு மாநிலத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். உக்ரைன்-ரஷ்யா போர் மூண்ட நிலையில் அங்குள்ள மாணவர்கள் விமானங்கள் மூலம் டெல்லி, பெங்களூரு, மும்பை, காசியாபாத் வழியாக இந்தியா திரும்பினர்.

இதற்கிடையில் குண்டுவீச்சில் நவீன் கொல்லப்பட்டார். நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, “நவீனை உயிருடன் அழைத்து வர முடியவில்லை என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கிறது. நவீன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும். நமது அரசாங்கம் நவீன் குடும்பத்துக்கு என்றென்றும் ஆதரவாக நிற்கும். அவரின் இளைய சகோதரரை அரசு பார்த்துக் கொள்ளும்” என்றார்.

Naveen
உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன்

மருத்துவ மாணவர் நவீன், மார்ச் 1-ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்க சென்ற போது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மாணவரின் உடலை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று காலை 3.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கிருந்து நவீனின் உடல் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க : Exclusive : உக்ரைன் போரில் பலியான கர்நாடக மாணவர் - என்ன நடந்தது... விளக்குகிறார் கோவை மாணவி!

Last Updated :Mar 21, 2022, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.