ETV Bharat / bharat

கலப்பு திருமணம் மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க பிஎப்ஐ திட்டம் - ஏடிஎஸ் குற்றப்பத்திரிக்கை!

author img

By

Published : Feb 10, 2023, 7:59 AM IST

ஏடிஎஸ் குற்றப்பத்திரிக்கை
ஏடிஎஸ் குற்றப்பத்திரிக்கை

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎப்ஐ திட்டமிட்டு இருந்ததாக மும்பை நீதிமன்றத்தில் பயங்கர தடுப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை: சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாகவும் கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனய்வு முகமை அதிகாரிகள் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. பிஎப்ஐ அமைப்பு மீது வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ, அமைப்பு தொடர்புடைய அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்திய முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. மேலும் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிஎப்ஐ அமைப்பின் மீதான விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், "வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎப்ஐ திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2047ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்குள் இஸ்லாமிய நாடாக மாற்றி, ஷிரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்துவதற்கு தேவையான பணிகளை பிஎப்ஐ அமைப்பு முன்னெடுத்தக் கொண்டு இருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்காக இஸ்லாமிய இளைஞர்களுக்கு பிஎப்ஐ அமைப்பு தொடர் பயிற்சி அளித்து வந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட இந்தியா மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்தை போல், பிஎப்ஐ அமைப்பும் பயங்கரவாத செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த சில மாதங்களாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், இந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்து வைப்பது தொடர்பாகன் இந்த அமைப்பினர் பேசி வந்ததாகவும், இதன் மூலம் நாட்டில் இஸ்லாமிய சமூகத்தை அதிகரிக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேருவின் பெயரை பயன்படுத்துவதில் என்ன தயக்கம்..! எதிர்க்கட்சிகள் மீது மோடி தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.