கரோனா தடுப்பூசியால் இளைஞர்கள் இறப்பா? - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்!

கரோனா தடுப்பூசியால் இளைஞர்கள் இறப்பா? - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்!
Covid 19 vaccine reduces risk of death: கோவிட் 19 தடுப்பூசி, இளைஞர்களிடம் இறப்பு அபாயத்தை குறைத்துள்ளதாகவும், ஒரு டோஸ் மட்டும் செலுத்தி இருந்தால் கூட இறப்பின் அபாயத்தை குறைக்க முடியும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
டெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக ஒரு கருத்து கூறப்பட்டது. இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது கர்பா நடனமாடிய 10 இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்களின் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், கோவிட் 19 தடுப்பூசி இந்திய இளைஞர்களிடம் இறப்பு அபாயத்தை குறைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதாவது, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 18 முதல் 45 வயதுடையவர்களிடம் நடத்திய ஆய்வில், கோவிட் 19 தடுப்பூசியின் மூலம் இறப்பு ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
"COVID-19 vaccination did not increase the risk of unexplained sudden death among young adults in India. Past COVID-19 hospitalization, family history of sudden death and certain lifestyle behaviours increased the likelihood of unexplained sudden death," says ICMR Study pic.twitter.com/pmeh0et1On
— ANI (@ANI) November 21, 2023
கோவிட் 19 தடுப்பூசி(covid vaccine) இரண்டு டோஸ்களில், ஒரு டோஸ் மட்டும் செலுத்தி இருந்தால் கூட இறப்பின் அபாயத்தை குறைக்க முடியும். போதைப்பொருட்களின் பயன்பாடு அதாவது, அதிகமாக மது அருந்துவது, புகை பிடித்தல், தீவிரமாக உடற்பயிற்சி செய்தல், கோவிட் தொற்றின் போது பெறப்பட்ட சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய் போன்றவை இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கோவிட் 19 தடுப்பூசி குறித்து விரிவான ஆராய்ச்சியை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு, குஜராத்தில் நிகழ்ந்த தொடர் இறப்பின் போது எழும்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான உடல் உழைப்புகளில் ஈடுபடக்கூடாது” என்று எச்சரித்தார்.
