ETV Bharat / bharat

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் போக்குவரத்து விமானம்.. இந்திய விமானப் படை திட்டம்!

author img

By

Published : Feb 4, 2023, 10:59 AM IST

விமானப்படை
விமானப்படை

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் புது முயற்சியல் இந்திய விமானப்படை இறங்கியுள்ளது.

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. போக்குவரத்து, சரக்கு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடுத்தர போக்குவரத்து விமானத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடுத்தர போக்குவரத்து விமானம் 18 முதல் 30 டன் வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டிருக்கும் வகையில் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்திய ஆயுதப்படை பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏவுகணைகள், கள துப்பாக்கிகள், விமானம் தாங்கிகள், ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், டாங்கர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடுத்தர போக்குவரத்து விமானத்தை தயாரிக்க இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது. இந்த விமான உற்பத்திக்கான பணியில் ரஷ்யா மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம் 15 முதல் 20 டன் எடையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ராணுவ துருப்புகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, பாரா ட்ரூப்பிங் / ஏர்டிராப் ஆகியவற்றின் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த உயர பாராசூட் பிரித்தெடுத்தல் அமைப்பு (LAPES) திறன் உள்ளது என்றும் அனைத்து வகையான சரக்குகளையும் கொண்டு செல்லக்கூடிய வகையில் விமானம் கட்டமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

ராணுவத்தில் AN-32 நடுத்தர இலகு ரக விமானத்திற்கு பதிலாக 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த விமானம் நிலை நிறுத்தப்படும் என இந்திய விமானப் படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ADHD நோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுவனின் படைப்பு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.