ETV Bharat / bharat

தீபாவளி தினத்தில் மோசமான காற்று மாசை கொண்ட டெல்லி!

author img

By

Published : Nov 14, 2020, 1:24 PM IST

Updated : Nov 14, 2020, 2:00 PM IST

delhi pollution, delhi air quality
delhi pollution

டெல்லியில் இன்று (நவ 14) காலை காற்று மாசின் அளவு மிகவும் மோசமாக இருந்தது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டால், காற்று மாசு துகளின் அளவு 2.5 நிலையை அடையக் கூடும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

டெல்லி: தீபாவளி கொண்டாட்டத்தின்போது மக்கள் வெடித்த பட்டாசுகளினால், காற்று மாசின் அளவு தீவிரமடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்தால் காற்றின் தரக் குறியீட்டு அளவு மேலும் மோசமடையும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கூடுதலாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் நாளை (நவ. 15) காற்றுத் துகள்கள் மாசின் அளவு 2.5இல் மோசமான நிலையை அடையும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி நகரத்தில் இன்று காலை 9 மணிக்கு காற்று மாசு குறியீடு 369 என்ற அளவில் இருந்தது. 24 மணி நேர சராசரி அளவு 339ஆகவும், இதே வியாழக்கிழமை (நவ. 12) 314 ஆகவும் இருந்தது. அண்டை நகரங்களான ஃபரிதாபாத் (323), காஜியாபாத் (412), நொய்டா (362), கிரேட்டர் நொய்டா (350), குர்கான் (338) ஆக இருந்தன.

டெல்லியில் 2019 தீபாவளி தினத்தில் 24 மணி நேர காற்று மாசின் சராசரி அளவு 337 ஆகவும், 368, 400 என அடுதடுத்த தினங்களில் பதிவாகியிருந்தது. அதேபோல 2018 ஆம் ஆண்டில், தீபாவளியன்று 281 ஆக காற்று மாசின் அளவு பதிவாகியிருந்தது. 2017 ஆம் ஆண்டில் அதுவே 319 ஆக பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு பிறகு வரும் நாட்களில், காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக காற்று மாசின் அளவு குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காற்றின் அளவு 15 முதல் 20 கிமீ அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

Last Updated :Nov 14, 2020, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.