ETV Bharat / bharat

Delhi Pollution: தலைநகரின் நுரையீரல் சுவாசிக்கத் திணறுகிறது... எச்சரிக்கை!

author img

By

Published : Nov 13, 2019, 12:34 PM IST

Updated : Nov 13, 2019, 4:15 PM IST

டெல்லி: காற்று மாசின் அளவு தலைநகரில் இன்று அதிகம் தென்படுகிறது. நச்சுக் காற்று புகை மண்டலமாகத் தலைநகர் முழுவதும் காட்சியளித்து மக்களை மரண பயத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

Delhi Pollution level

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு சமீபகாலமாக அபாயகர அளவை தாண்டி இருந்து வருகிறது. இது பொது மக்களை கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பல கட்ட திட்டங்களும் டெல்லியின் காற்று மாசுபாட்டைத் தடுக்க உதவியதாகத் தெரியவில்லை. இந்த சூழலில் டெல்லி நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காற்று மாசின் அளவு அபாயகர அளவை தொடும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்(CPCB) அறிக்கையின் படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று மாலை 4 மணிக்கு 425 என்ற அளவிலும், இரவு 9 மணிக்கு 437 என்ற அளவிலும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதுவே திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு 360ஆக இருந்தது.

latest Delhi Pollution level, delhi emergency zone today, air quality in delhi, டெல்லி காற்று மாசு அபாயகர அளவு, delhi air quality index
டெல்லி தலைநகர்: இன்று காலை 8:29 மணி நிலவரப்படி

வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பதிலும் சிரமம்! டெல்லிக்கு என்ன ஆச்சு!

டெல்லி நகரத்தின் வாசிர்பூர் பகுதி காற்று மாசால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இன்று அளவிடப்பட்டுள்ளது. இதன் மொத்த காற்று தரக் குறியீடு 465ஆக இருந்தது. மேலும், பவானா 464, ரோகிணி 454, முண்ட்கா 458, ஆனந்த் விகார் 458, ஃபரிதாபாத் 413, ஹாசியாபாத் 461, நொய்டா நகரம் 444, நொய்டா 453 என்ற அளவுகளில் காற்று மாசின் தரக் குறியீடுப் பதிவாகியுள்ளது.

latest Delhi Pollution level, delhi emergency zone today, air quality in delhi, டெல்லி காற்று மாசு அபாயகர அளவு, delhi air quality index
நொய்டா: இன்று காலை 8:29 மணி நிலவரப்படி
latest Delhi Pollution level, delhi emergency zone today, air quality in delhi, டெல்லி காற்று மாசு அபாயகர அளவு, delhi air quality index
ஃபரிதாபாத்: இன்று காலை 8:29 மணி நிலவரப்படி

உச்சநீதிமன்றம் டெல்லி காற்று மாசின் நிலை குறித்து, அவசர அறிக்கையைக் கோரியுள்ளது. தலைநகரில் சூழ்ந்துள்ள இந்த நச்சுக் காற்றால் மக்கள் கட்டுப்படுத்த முடியாத சுவாச கோளாறுப் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Nov 13, 2019, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.