ETV Bharat / bharat

டெல்லியில் காற்றின் தரம் இந்த வாரம் உச்சத்தை தொடும்

author img

By

Published : Dec 2, 2020, 7:33 AM IST

Delhi'
Delhi'

டெல்லியில் காற்றின் தரம் இந்த வாரம் கடுமையான உச்சத்தை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு சமீபகாலமாக அபாயகர அளவை தாண்டி வருகிறது. இது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. இது வரும் நாட்களில் மிகவும் கடுமையாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நேற்று காற்றின் தரக் குறியீட்டு அளவு 367ஆக இருந்துள்ளது. இது திங்களன்று 318ஆகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 268ஆகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 4 முதல் டிசம்பர் 7 வரை காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று அதிகபட்சமாக காற்றின் வேகம் 8 கி.மீ வேகத்தில் வீசியது. இன்று புதன்கிழமை 10 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 8.1 டிகிரி செல்சியஸ் என்றும் அதிகபட்ச 27.2 டிகிரி என்று பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி தினத்தில் மோசமான காற்று மாசை கொண்ட டெல்லி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.