ETV Bharat / bharat

The Asian Games 2023: பஜ்ரங், வினேஷ்-க்கு தகுதி தேர்வில் விதிவிலக்கிற்கு எதிரான வழக்கு; டெல்லி நீதிமன்றம் நாளை விசாரணை!

author img

By

Published : Jul 21, 2023, 11:01 PM IST

Updated : Jul 22, 2023, 7:54 PM IST

Etv Bharat
Etv Bharat

சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்க மல்யுத்த வீராங்கனைகள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு அளித்த விதிவிலக்கிற்கு எதிரான வழக்கு நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

டெல்லி: டெல்லியில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் (The Asian Games 2023) பங்கேற்பதற்கு இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி தகுதி தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு நேரடியாக கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதற்கு இளம் வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தகுதி தேர்வில் இருந்து விதிவிலக்குடன் நேரடியாக கலந்துகொள்ள அளித்த அனுமதிக்கு எதிரான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நாளை (ஜூலை 22) விசாரணைக்கு வருகிறது. மல்யுத்த வீரர்கள் அவினாஷ் பங்கல் மற்றும் சுஜித் கல்கல் ஆகியோரின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.

முன்னதாக, இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணை ஜூலை 23ஆம் தேதி வரையில் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிறந்த மல்யுத்த வீரர் யார்? என்ற பிரச்னையை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம் என்றும் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பது மட்டும் பார்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் ஹிருஷிகேஷ் பருவா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (Indian Olympic Association) தற்காலிக குழுவால் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ளனர்.

மல்யுத்த வீரர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது: மல்யுத்த வீரர்களுக்கு விலக்கு அளிக்காமல் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் இது தொடர்பாக மனுவில் கோரப்பட்டுள்ளது. முழு செயல்முறையும் வீடியோ எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வினேஷ் போகத் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரடி நுழைவு கிடைத்துள்ளதாகவும், அதே நேரத்தில் வினேஷ் கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெறவில்லை என்றும் பங்கல் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இவ்விரு மல்யுத்த வீரர்களுக்கும் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் தற்காலிக குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் வரும் செப்டம்பரில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த குழுவில் இறுதி மதிப்பீட்டு வீரர்கள் சீனாவுக்குச் செல்வதற்கு முன் இதற்கான தேர்வு பணிகள் நடக்கும் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் நாங்கள் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்ததாகவும், அதே நேரத்தில் இவ்வாறு தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற விரும்பவில்லை என்றும் மத்திய அரசின் இந்த செயல்பாடு ம்ல்யுத்த வீரர்களின் போராட்டத்தை கைவிடுவதற்காகவும், ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிப்பதாகவும் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Wrestlers Protest: "சாக்ஷி மாலிக் காங்கிரஸின் கைப்பாவையாக உள்ளார்" - பபிதா போகத் விமர்சனம்

Last Updated :Jul 22, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.