ETV Bharat / bharat

Jasprit Bumrah: இந்திய அணியின் துணை கேப்டன் ஆகிறாரா பும்ரா?

author img

By

Published : Aug 21, 2023, 11:37 AM IST

ஜஸ்பிரித் பும்ரா vs ஹர்திக் பாண்டியா
Jasprit Bumrah vs Hardik pandya

India Vice captain: இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி: ஆசிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான அணி விவரங்களை வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தேர்வு செய்துவிட்டது. இந்நிலையில் ஆசிய ஒருநாள் கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று (ஆக்ஸ்ட் 21) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்ட நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்வாகும் அணியே உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணியில் இடம்பெற வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

  • Jasprit Bumrah strong contender to become Vice Captain of team India in ODIs alongside Hardik Pandya. (PTI). pic.twitter.com/IF88kjP1oa

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார்களா என்ற எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!

காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டானாக நியமிக்கப்பட்டார். இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே பும்ரா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஷித் சர்மா இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டன் பொருப்பை வகித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-க்கு 2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இதற்கு ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே காரணம் என பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இதனால் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

ஆசிய கோப்பைக்கான கணிக்கப்படும் இந்திய அணியின் விவரம்:

ரோஹித் சர்மா ( கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்திப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன் ( 2வது விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ரவிசந்திரன் அஸ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க: IND VS Ire 2nd T20 : அயர்லாந்தை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள்! தொடரை கைப்பற்றியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.