ETV Bharat / sports

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!

author img

By

Published : Aug 21, 2023, 10:00 AM IST

ISSF World Championship 2023: ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் அகில் ஷியோரன் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்துள்ளார்.

Akhil Sheoran
அகில் ஷியோரன்

பாகு: உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் நூலிழையில் வெள்ளிப் பதக்கத்தை கோட்டை விட்ட இந்திய வீரர் அகில் ஷியோரன், அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்.

ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 50 மீட்டர் ரைபில் 3வது பொஷிசன் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த அகில் ஷியோரன் கலந்து கொண்டார். திறமையான ஷாட்டுகளை மேற்கொண்ட அகில் ஷியோரன் ஒட்டுமொத்தமாக 450 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஷ்மிர்ல் 462.2 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், செக்குடியரசின் பீட்டர் நிம்பர்ஸ்கி 459.2 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். இந்தியாவின் ரிதம் சங்வான், இஷா சிங், மனு பாக்கர் ஆகிய மூவரும் குழு பிரிவின் 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றனர்.

ரிதம் சங்வான் மட்டும் 583 புள்ளிகளுடன் இறுதி போட்டியில் எட்டவது இடத்தை பிடித்தார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முன்று தங்கம் மற்றும் முன்று வெண்கலம் கைப்பற்றி பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அதேநேரம் ஏழு தங்கம், முன்று வெள்ளி மற்றும் முன்று வெண்கல பதக்கக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: Malinga : மும்பை இந்தியன்ஸில் மீண்டும் இணைகிறாரா மலிங்கா?

வெண்கல பதக்கத்தை வென்ற அகில் ஷியோரன் அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள பாரீஸ் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாரீஸ் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதியான 6வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக பவுனீஷ் மெந்திரட்டா (ஆடவருக்கான டிராப் பிரிவு), ருத்ராங்க் ஷ் பாலாசாஹேப் பாட்டீல் (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஸ்வப்னில் குசலே (ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்), மெஹுலி கோஷ் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள்) ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

வெண்கலம் வென்றது குறித்து அகில் கூறுகையில், "இதற்காக பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகிறோம். நான் 0.1 புள்ளிக்களிலேயே வெள்ளியை தவறவிட்டேன். இன்னும் சிறுது முயற்சி எடுத்திருந்தால் வெள்ளி பதக்கத்தை வென்று இருப்பேன். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த உலக சாம்பியன்ஷி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: IND VS Ire 2nd T20 : அயர்லாந்தை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள்! தொடரை கைப்பற்றியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.