ETV Bharat / bharat

‘திமுகவின் ஏஜெண்டாக செயல்படும் கர்நாடக முதலமைச்சர்’ - பாஜக, ஜேடிஎஸ் கூட்டணி குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 7:11 PM IST

Etv Bharat
Etv Bharat

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்து கர்நாடகவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக முதலமைச்சர் திமுகவின் ஏஜெண்டாக செயல்படுவதாக விமர்சித்துள்ளனர்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விதான்சவுடா பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்து பாஜக, ஜேடிஎஸ் [The Janata Dal (Secular)] கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து (செப்.27) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி ஒன்று சேர்ந்து நடத்தும் முதல் போராட்டம் இதுவாகும்.

இந்த போராட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி, டி.வி.சதானந்த கவுடா, முன்னாள் டி.சி.எம்., கோவிந்த காரஜோலா, பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், இரு கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிஎஸ் எடியூரப்பா கூறியதாவது, “முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோர் திமுக ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். சமரச அரசியல் செய்கிறார்கள். கர்நாடக மாநில மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறது. உங்கள் அரசியல் நாடகம் இங்கு அனுமதிக்கப்படாது. தமிழ்நாட்டின் ஏஜெண்டாக நடந்து கொள்கிறீர்கள். மக்களை காக்க முன்வராவிட்டால், தொடர்ந்து போராடுவோம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய எச்.டி.குமாரசாமி, "காங்கிரஸ் அரசு உத்தரவாதம் என்ற மாயையில் உள்ளது. அதைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. இந்த அரசு மக்களைக் காப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. நீதி கிடைக்கும் வரை போராடுவோம். நாட்டின் நிலத்தடி நீரை காப்பதற்கு ஒன்றுபட்டு போராடுவோம். விவசாயிகளின் உயிர் நம்மிடம் உள்ளது. இதில், அரசியல் ஏதும் இல்லை. ஆனால் இங்கு அரசியலைக் கலைக்க முதலமைச்சர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

இந்த அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்த பிறகே, கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், எங்களது எந்த ஆலோசனையும் பரிசீலிக்கப்படவில்லை'' என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெங்களூருவில் வியாபாரம் செய்வதற்கு நீர்ப்பாசன அமைச்சருக்கு நேரமில்லை. 10 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால், எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. இது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசிடம் நேரில் சென்று கோரிக்கை விடுக்கவில்லை” என குமாரசாமி குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: "கூட்டணி முடிவு குறித்து சொல்ல விரும்பவில்லை’ - வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.