ETV Bharat / bharat

விவசாய கழிவினை எரிப்பதால் வரும் புகையினால் கரோனா அழிந்துவிடுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Oct 6, 2020, 8:22 PM IST

coronavirus
coronavirus

டெல்லி: விவசாய கழிவினை எரிப்பதால் வரும் புகையினால் கரோனா அழிந்துவிடுமா என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயக் கழிவினை எரிப்பதன் மூலம் வெளியாகும் புகையால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவு எரிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் விவசாயக் கழிவினை எரிப்பதற்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது, விவசாய கழிவினை எரிப்பதால் கரோனா வைரஸ் நோய் அழிந்துவிடுமா? என பாப்டே கேள்வி எழுப்பினார். சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஆதித்யா துபே ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், "டெல்லியின் 40 விழுக்காடு மாசுவிற்கு விவசாய கழிவுப்பொருட்கள் எரிக்கப்படுவதே காரணமாக உள்ளது.

இம்மாதிரியான மாசு கரோனாவை மேலும் மோசமாக்கும் என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரிப்பதால் கரோனா பரவல் அதிகரிக்கும் என லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரானா காலத்தில், டெல்லி தேசிய தலைநகரப் பகுதியில் மாசு அதிகரிப்பதன் மூலம் உயிரிழப்பு அதிகரிக்கும். குறிப்பாக முதியோர்களையும் குழந்தைகளையும் பாதிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "இம்மாதிரியான விவகாரங்களை சமாளிக்க நடுநிலையான நிபுணர்கள் தேவை. இப்பிரச்சினை குறித்து முன்னதாகவே அணுகாதது ஏன்?" என்றார். கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 569 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் நிழல் உலக தாதாவான முத்தப்பா ராயின் மகன் வீட்டில் சோதனை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.