ETV Bharat / bharat

தண்ணீர் குழாயில் இனி செல்போனுக்கு சார்ஜ் போடலாம் - ஆந்திர மாணவரின் அதிசய கண்டுபிடிப்பு

author img

By

Published : Sep 25, 2019, 11:03 PM IST

Updated : Sep 26, 2019, 8:20 AM IST

cell phone charger

அமராவதி: கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர், தண்ணீர் குழாயில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளார்.

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெறும் புத்தகத்தை மட்டும் புரட்டினால் மதிப்பெண்களை மட்டுமே பெற முடியும். ஆனால் அதிலிருந்து மாறுபட்ட சில மாணவர்களுக்கு தனித்திறமையுடன் இருப்பதோடு, அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகளை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு. அந்த வகையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் திருமலாநேதி சாய் என்பவர் செல்ஃபோன் சார்ஜ் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளார்.

துணி நகரத்தைச் சேர்ந்த சாய், தற்போது முதலாமாண்டு பாலிடெக்னிக் பயின்று வருகிறார். இவர் தனது சிறுவயதிலிருந்தே சிறு சிறு தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தற்போது, அவர் தண்ணீர் பைப்பில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளார். அவர் பழைய பிளாஸ்டிக், 5 வாட்ஸ் பேட்டரி, யுஎஸ்பி கேபிள், எல்இடி பல்ப், இரண்டு சுவிட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த புதிய கருவியை சாய் உருவாக்கியுள்ளார்.

cell phone charger
மாணவனின் புதிய சார்ஜ் கருவி

மேலும் அந்த கருவியின் உள்ளே சிறிய அளவிலான மோட்டாரை வைத்திருக்கும் அவர் அதனை வீட்டிலிருக்கும் பைப்பில் மாட்டுகிறார். அப்போது அந்த கருவியின் உள்ளே இருக்கும் மோட்டார் சுற்றுவதால் வெளிப்படும் சக்தியானது பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அந்த கருவியோடு இணைக்கப்பட்டிருக்கும் யுஎஸ்பி கேபிள் மூலமாக செல்போன் சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் எல்இடி விளக்கு மின்சாரம் இல்லாத இரவு சமயங்களில் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் சாய்.

ஆந்திர மாணவரின் அதிசய கண்டுபிடிப்பு

வீட்டிலிருக்கும் குழாய்களை திறந்து விட்டுச் செல்லும் பொறுப்பில்லாத இளைஞர்கள் வாழும் இந்தக் காலத்தில் அந்த குழாயைக் கொண்டு மின்சாரம் தயாரித்து செல்ஃபோனுக்கு சார்ஜ் செய்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.

cell phone charger
புதிய கருவியைக் கொண்டு செல்போனில் சார்ஜ் செய்கிறார் சாய்
Intro:Body:

An young boy innovated a new concept for charging the cell phones with pipe water which are using for households. Tirumalanedi Sai is a Politechnic first year student from Tuni town, East Godavari dist. Sai has long been interested in making small devices and intends to innovate to serve a variety of needs. With this interest it is made of old plastic, plastic container, 5 watts battery, old USB cable, an LED bulb, 2 switches, a rubber glove to fit tap and a small motor. Fixed small motorized mini turbine with plastic bottles. He put a rubber glove on the top tube and prepared the water to get out of it. On top of that, a small plastic container was fitted with a battery and a USB cable and a small LED bulb. After that open the tap for water. With floating of the water power will generate. By fixing the motor turbine charge the cell phone and small light also can work. 


Conclusion:
Last Updated :Sep 26, 2019, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.