ETV Bharat / bharat

"சனாதனத்தை எதிர்த்தால் இந்த கதி தான்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 5:46 PM IST

abusing-sanatana-dharma-is-reaction-for-congress-defeat
”சனாதனத்தை எதிர்த்தால் இது தான் கதி” உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Sanatana Dharma: சனாதனத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை நேர்ந்ததாக இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

சென்னை: நடந்த முடிந்த 5 மாநில சட்டப் போரவை தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று (டிச. 3) அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

  • Abusing Sanatana Dharma was bound to have it’s consequences .
    Many congratulations to the BJP for a landslide victory. Just another testimony of the amazing leadership of Prime Minister @narendramodi ji & @AmitShah & great work by the party cadre at grassroot levels…

    — Venkatesh Prasad (@venkateshprasad) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் காங்கிரஸின் தோல்வியை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சனாதன தர்மத்தை அவமதித்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும்.

மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் அற்புதமான தலைமைக்கு கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் சிறப்பான பணிக்கு மற்றோற்று சான்றாகும்" என்று பதிவிட்டு உள்ளார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bye Bye KCR..! சூட்கேஸ் பரிசளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா..! கே.டி.ஆர்.ரியாக்‌ஷன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.