ETV Bharat / bharat

ஆதார் வைச்சு இனி இந்த வேலைகள முடிக்க முடியாது? போச்சுடா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 3:26 PM IST

இனிமேல் பிறப்புச்சான்று ஆவணமாக ஆதார் எடுத்துக்கொள்ளப்படாது
இனிமேல் பிறப்புச்சான்று ஆவணமாக ஆதார் எடுத்துக்கொள்ளப்படாது

பிறப்பு சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும் படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிறப்பு சான்றுக்கான ஆவணமாக ஆதார் ஏற்றுக்கொள்ளப் படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி: பிறப்பு சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும் படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிறப்பு சான்றுக்கான ஆவணமாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஆதாரை அடிப்படையாக வைத்தே மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிம் கார்ட் வாங்குவதில் தொடங்கி, வங்கிகளில் கடன் பெறுவது, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது வரை ஆதார் முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு சமர்பிக்கப்படும் ஆவண பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும் படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO - Employees provident Fund Organisation) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - Unique Identification Authority of India) அறிவுறுத்தி உள்ளது.

இதனை அடுத்து வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த ஜன.16 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவணங்களில் இருந்து ஆதார் நீக்கப்படுகிறது என்றும், இந்திய தனித்துவ அடையான ஆணையத்தின் உத்தரவு படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் என கூறியுள்ளது.

இதையும் படிங்க: "ரூ.9,700 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை" - ஆர்பிஐ பகீர் தகவல்!

இதற்கான காரணங்கள் என்ன?: ஆதார் சட்டம் 2016ன் படி பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதார் ஒருவரின் அடையாளத்திற்கான, அதாவது பயோமெட்ரிக் தகவல்கள் சரிபார்க்க பயன்படுகிறது. ஆகவே பிறந்த தேதியை சரிபார்க்கும் ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்பட்டு உள்ளது.

இந்த முடிவு மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC - Central Provident Fund Commissioner) ஒப்புதலுடன் எடுக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சீரமைக்க, வருங்கால வைப்பு நிதி மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்ய ISD, அதாவது உள்ளமைப்பு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் இடைவெளி! அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.