LIVE: தென் சென்னை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்! - EPS ELECTION LIVE CAMPAIGN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 7:51 PM IST

Updated : Apr 15, 2024, 8:50 PM IST

thumbnail

சென்னை: அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 15) மத்திய மற்றும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகளைக் காணலாம்...தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது.இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி-யை ஆதரித்து அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணியளவில் தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மற்றும் நாமக்கல்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Last Updated : Apr 15, 2024, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.