ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து: 4 வயதுக் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு! - bike accident at mayiladuthurai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:08 PM IST

4 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு
இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து

Bike accident near Mayiladuthurai: சீர்காழி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் மற்றும் 4 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த வருசபத்து பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 4 வயதுக் குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுபாஷ், நவிரூபன் ஆகிய இரு இளைஞர்களும் தொடுவாய் பகுதியில் தங்கள் நண்பரின் உறவினர் இறப்பிற்குச் சென்றுவிட்டு, இன்று (ஏப்.06) மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.

அப்போது இருவரும் வருஷபத்து அருகே சென்றுகொண்டிருந்த போது, வருஷபத்து மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சக்திகா மற்றும் தர்ஷிதா(4) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளனர். அப்பொழுது இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 வயதுக் குழந்தை தர்ஷிதா மற்றும் இளைஞர் சுபாஷ் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த சக்திகா, நவீருபனை ஆகிய இருவரையும் மீட்ட பொது மக்கள், 108 வாகனம் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து சக்திகா மேல் சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் நவிருவன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் குழந்தை மற்றும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த கும்பல்.. போலீசார் தீவிர விசாரணை! - Highway Robbery

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.