ETV Bharat / state

கட்டி முடித்த கடனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய சங்கம்.. 2 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் குறைதீர் ஆணையம் உத்தரவு.. - tiruvarur consumer court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 3:21 PM IST

tiruvarur consumer court
tiruvarur consumer court

Tiruvarur consumer court: முன்கூட்டியே கட்டி முடிக்கப்பட்ட கடன் தொகை கட்டவில்லை எனக் கூறி நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை ஊழியர்கள் சிக்கன மற்றும் கடன் சங்கத்துக்கு இரண்டு லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர்: கூத்தாநல்லூர் வட்டம் பண்டுதக்குடியை சேர்ந்தவர் சுரேஷ் 41. இவர் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகக் கடந்த 2010ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் ரூ 3.5 லட்சத்தைக் கடனாகப் பெற்று கடனை செலுத்தி வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு அதே சங்கத்தில் 7 லட்சம் மீண்டும் கடன் பெற்றுள்ளார். ஏற்கனவே கட்ட வேண்டிய தொகையைக் கழித்துக்கொண்டு எஞ்சிய தொகை சுமார் ரூ 3.56 லட்சத்தை மாத தவணை தொகையாக ரூ.18 ஆயிரம் கட்ட வேண்டும் என்றாலும் ரூ.2 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.20 ஆயிரமாகச் செலுத்தி வந்துள்ளார். அதன்படி, 2022ம் ஆண்டு எஞ்சிய தொகையையும் செலுத்தி கடன் தவணை முடிவதற்கு முன்பாகவே கடன் தொகையைச் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், 2023ம் ஆண்டு சுரேஷுக்கு மருத்துவ ஊழியர்கள் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் தொகை கடன் பாக்கி உள்ளதாகவும் அதனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக இதனை எதிர்த்து சுரேஷ் திருவாரூர் மாவட்ட குறைவீர் ஆணையத்தில் முறையீடு செய்தார்.

இது தொடர்பான வழக்கு ஆணைய தலைவர் சேகர் உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த குறைதீர் ஆணையம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், இது குறித்து விசாரணை செய்து சட்ட முறைப்படி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பி வழங்க வேண்டும்.

உறுப்பினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் இரண்டு லட்சத்தை, தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சிக்கனம் மற்றும் கடன் சங்கம் அல்லது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து வழங்க வேண்டும். வழக்கு செலவுக்காக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவு தேதியிலிருந்து ஒரு மாதத்தில் வழங்கிடவும் மேலும் தடையில்லா சான்று உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது" - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு! - Teachers Salary Deduction

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.