ETV Bharat / state

"வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து திமுக-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்" - ஜி.கே.வாசன்! - G K Vasan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 4:44 PM IST

GKVasan
ஜி கே வாசன்

Tamil Maanila Congress President G.K.Vasan: ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள். மக்கள் திமுகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது இந்தி மொழி தொடர்பான பிரச்சனைகளை திமுக எழுப்புவதை வழக்கமாகியுள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

"வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து திமுக-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்" - ஜி.கே.வாசன்!

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சார ஒளி நாடாவைத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தமாகா தலைமை ஜி.கே.வாசன் பேசியதாவது, “காவிரி மேலாண்மை கூட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் கூட்டணிக்காகப் பெங்களூரு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீருக்காகப் பெங்களூர் செல்லவில்லை.

இந்தி மொழி: தேர்தலில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அவற்றைத் தேர்தல் ஆணையம் முறையாகக் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் விதிமீறலைத் தொடங்கிவிட்டன. ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள். மக்கள் திமுகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது இந்தி மொழி தொடர்பான பிரச்சனைகளை திமுக எழுப்புவது வழக்கமாகியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: நிதியமைச்சர், தேர்தலில் நின்றால் தனக்குப் பொருளாதாரம் சிக்கல் ஏற்படும், தேர்தலில் போட்டியிடுவதற்கான பணம் எண்ணிடம் இல்லை என்று கூறியது அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையைக் குறிக்கிறது.

சைக்கிள் சின்னம்: கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காகப் போராடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. தற்போது முறையான நேரத்தில் சரியான பணியின் காரணமாகச் சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது. 9 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ளது. ஒரு கட்சிக்குச் சின்னம் வேண்டும் என்றால் அதற்கான கோட்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதனை முறையாகப் பின்பற்றாமல் சின்னம் கிடைத்தவர்களைக் குறை கூறுவதைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தாக்குதல்களால் சங்கடப்படுவது ஜனநாயகத்திற்கான கேடு. தனிமனித ஒழுக்கம் என்பது மிக முக்கியம். பாலியல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இதுபோன்ற மிருகத் தனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தூக்குத் தண்டனைகள் விரைவாக வழங்க வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், 2021 தேர்தல் பரப்புரையின் போது சைக்கிள் சின்னத்திற்குப் பதிலாக கை சின்னம் மாற்றிக் கொடுத்தனர். இந்தியாவில் மத்தியில் கை சின்னம் ஆட்சிப்பொறுப்பில் வரப்போவதில்லை. என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஸ்ரீபெரும்புதூரில் திமுகவுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் அதிகமாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் உட்பட திமுக பிரபலங்கள் இருக்கும் தொகுதியில் எல்லாம் எங்களது வெற்றி உறுதி.

நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி மாணவர்களைக் குழப்ப மனநிலையிலேயே திமுக அரசு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்வேன். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக் கொண்டு வந்தால் என்ன பலன். தமிழகத்தில் 100 சதவீதம் போதைப் பொருள் புழக்கம் இல்லை என தெரிவித்தால் எங்களது வெற்றி உறுதி செய்ய பட்டுவிடும். போதைப் பொருள் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செயல்பட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: "ஜனநாயகத்தை காக்க பேரணி"- டெல்லியில் திரண்ட இந்தியா கூட்டணி தலைவர்கள்! - INDIA Bloc Protest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.