ETV Bharat / state

தேனிக்கு ஆரஞ்சு அலர்ட்.. பேரிடர் புகார் எண் அறிவிப்பு - Theni Rain today

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 4:50 PM IST

Theni Collector advised public: தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கைப் பேரிடர் தொடர்பான புகார்களுக்கு அலைபேசி எண்ணை தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Theni District Collector R.V. Shajeevana & Rain Visual
Theni District Collector R.V. Shajeevana & Rain file image (Credits - Theni Official Website and ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டத்தில் இன்று, நாளை (மே 18) மற்றும் நாளை மறுநாள் (மே 19) ஆகிய மூன்று நாட்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 20ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.

தேனி மாவட்ட பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இயற்கைப் பேரிடர் தொடர்பான தங்கள் புகார்களை 04546-250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 66 தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் புகார்கள் பெற்று, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது, தேனி நகர் பகுதியான அன்னஞ்சி, அல்லிநகரம், அரண்மனைபுதூர், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை! - Met Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.