ETV Bharat / state

திருவாரூர் அருகே கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 2 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்! - Thiruvarur Car Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 11:20 AM IST

Etv Bharat
Etv Bharat

Thiruvarur Car Accident: குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்ற போது திருவாரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர்: சந்திரசேகரன் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தினருடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து வேளாங்கண்ணிக்கு மகேந்திரா ஸ்கார்பியோ காரில் நேற்று (ஏப்.5) இரவு புறப்பட்டு சென்றுள்ளார். காரை சந்திரசேகரனின் மகன் சரண் 24 என்பவர் ஓட்டிய நிலையில், மனைவி ஜான்சி ராணி (45), உறவினர் மாரிமுத்து (54), பேபி (48), கார்த்திகா (31), இரட்டை குழந்தைகளான யுவன் 3 மற்றும் யுவிதன் 3 ஆகியோரும் இந்த காரில் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சாவூர் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் அதிகாலை கார் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் சரணின், கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடியதில் அருகில் இருந்த பனை மரத்தில் மோதி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட மக்கள், உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசார் தகவல் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார், கவிழ்ந்து கிடந்த காரில் படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

சந்திரசேகரனின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாரூர் தாலுகா போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனி அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விபத்து..மாணவிகள் படுகாயம் - A Roof Collapsed Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.