ETV Bharat / state

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்படி? - salem dmk candidate Selvaganapathy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 8:49 PM IST

வழக்கறிஞர் விளக்கம்
நீண்ட இழுபறிக்குப் பின் சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி மனு ஏற்பு

DMK candidate Selvaganapathy: சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி இரண்டு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததால், அவரது மனு எற்கப்படாமல் இருந்த நிலையில், அவரது வழக்கறிஞர்கள் விளக்கம் கொடுத்த பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீண்ட இழுபறிக்குப் பின் சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி மனு ஏற்பு

சேலம்: இரண்டு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்து அதை வேட்பு மனுவில் மறைத்ததாக, சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது புகார் எழுந்து நிலையில், அவரது வழக்கறிஞர்களின் விளக்கத்திற்கு பிறகு, இன்று (மார்ச் 28) மனு ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15வது சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, இரண்டு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததால், அவரது வேட்பு மனு நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் சார்பில் வழக்கறிஞர் விடுதலை மற்றும் வழக்கறிஞர்கள் குழு நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குச் சென்று, உரிய விளக்கங்களைக் கொடுத்து, எழுத்துப்பூர்வமான விளக்கங்களையும் சமர்ப்பித்தது.

இதனை அடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் மனுவை ஏற்றுக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் விடுதலை, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இரண்டு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது உண்மை. ஆனால் ஒரு முகவரியில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை நீக்கக் கூறி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பம் வழங்கிவிட்டார்.

அதில் செல்வகணபதி மீது தவறு இல்லை, அதிகாரிகள் மீது தான் தவறு, இந்த கருத்தை தெளிவாக சட்ட விதிகளுடன் நாங்கள் எடுத்துக் கூறினோம். மேலும், நீதிமன்றத்தில் அவர் மீது உள்ள வழக்குகள் குறித்த சந்தேகங்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெளிவாக எடுத்துக் கூறினோம். அதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, செல்வகணபதியின் வேட்பு மனுவை அவர் ஏற்றுக் கொண்டார்” என கூறினார்.

இதையும் படிங்க: நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்! - BJP Candidate Annamalai Nomination

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.