ETV Bharat / state

நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்! - BJP candidate Annamalai nomination

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 7:47 PM IST

Updated : Mar 28, 2024, 10:56 PM IST

Annamalai Affidavit issue: அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது என நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

aiadmk-and-ntk-demanded-rejection-of-coimbatore-bjp-candidate-annamalai-nomination
நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை?

நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்!

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, இன்று (மார்ச் 28) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, மொத்தம் 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனிடையே பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலையின் வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்பதால் அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.

அண்ணாமலையின் வேட்பு மனுவில் படிவம் 26-இல் வேட்பாளரின் குற்றப் பின்னணி வரிசைப்படுத்தவில்லை எனவும், வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை எனவும் கூறி, அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும் மீறி, பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புது சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்தி குமாரிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.

அப்போது விதிமுறைகளை மீறி வேட்பு மனுத் தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இது குறித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், "அண்ணாமலை வேட்புமனு மீது நிறைய பிரச்னைகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். அண்ணாமலையின் பிரமாண பத்திரம் நீதிமன்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் கொடுத்துள்ளார். இது முற்றிலும் தவறு. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது தவறு.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு கமா இல்லை, புள்ளி இல்லை என வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனையின் போது நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்கவில்லை. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் கூட, அந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கூடும்.

அண்ணாமலைக்கு போடக்கூடிய வாக்குகள் வீண் தான். தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட வேண்டும். நடுநிலையாக செயல்படக்கூடிய அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதுபோன்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. படிக்காதவர்கள் கூட இது போன்ற தவறுகளை செய்ததில்லை. அண்ணாமலை வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன், "நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது சட்டப்படி தவறு. அண்ணாமலையின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒருவேளை அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டாலும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது.

இது முழுக்க முழுக்க வேட்பாளரின் தவறு. அதனை தேர்தல் அதிகாரிகள் சரி பார்க்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அந்த முத்திரைத்தாளை வழக்கு தாக்கல் செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய வேட்பாளர்கள், நேற்று (மார்ச்.27) வரை அபிடவிட் பதிவேற்றம் செய்யாத நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக ஐந்து மணிக்கு மேல் புதிய அபிடவிட்டை பதிவேற்றம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினர்.

இவ்வாறு அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் Non judicial முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

இதையும் படிங்க: ’தலைவர் 171’ டைட்டில் டீசர் எப்போது? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்! - Thalaivar 171 Title Teaser

Last Updated :Mar 28, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.