ETV Bharat / state

ராமநவமி யாத்திரை: என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Rama navami Yatra case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 3:56 PM IST

ராமநவமி யாத்திரை: காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ராமநவமி யாத்திரை: காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Rama Navami Yatra case: ராமநவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்த வழக்கில் காவல்துறைக்குப் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல அனுமதி கோரி, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததைச் சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சென்னை உயர்நீதிமன்ற ஜி.ஜெயச்சந்திரன், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: விமானியிடம் ரூ.2.11 லட்சம் மோசடி முதல் பர்த்டே பார்ட்டியின் போது நேர்ந்த விபத்து வரை சென்னை க்ரைம் நியூஸ்! - Chennai Crime News

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.