ETV Bharat / state

ஜி-ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை! - Income Tax Department raid

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 9:28 AM IST

Updated : Mar 21, 2024, 2:43 PM IST

INCOME TAX DEPARTMENT RAID
INCOME TAX DEPARTMENT RAID

ED raid at G-Square: சென்னையை தலைமையிடமாக கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் (G-Square) நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் அமைந்துள்ள ஜி-ஸ்கொயர் (G-Square) நிறுவனத்த்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 7 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல் சென்னை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் உள்ள ஜி-கொயர் இயக்குநர் பாலா வீட்டில் இரண்டு வாகனத்தில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனத்திற்குத் தொடர்புடைய நீலாங்கரை, தரமணி, ஆழ்வார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக பலமுறை வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வருமான வரித் துறையின் பறக்கும் படை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சென்னை தரமணியில் மென்பொருள் சப்ளை செய்யக்கூடிய நிறுவனம் ஒன்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜீ- ஸ்கொயர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை எண்ணிக்கை அதிகரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பணம் பட்டுவாடா, மறைக்கப்பட்ட வருவாய் உள்ளிட்ட தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவருக்கு அதிமுகவில் எம்பி சீட்.. யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?

Last Updated :Mar 21, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.