ETV Bharat / sports

RSA VS NZ: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து பின்னடைவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 2:19 PM IST

Updated : Feb 15, 2024, 10:23 PM IST

RSA VS NZ
தென்னாப்பிரிக்கா VS நியூசிலாந்து

RSA VS NZ 2nd Test match: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 31 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

ஹாமில்டன் (நியூசிலாந்து): தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று(பிப்.13) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக நீல் பிராண்ட்-ஃபொர்ட்டின் ஜோடி களமிறங்கியது. இதில் ஃபொர்ட்டின் பிலிப்ஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வோன் டோன்னர் களமிறங்கினார். 6 ஓவர் முடிவிற்கு 14 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற கணக்கில் விளையாடியது. நீல் பிராண்ட் தனது முதல் பவுண்டரியை 7வது ஓவரில் விளாசினார். 10 ஓவர் முடிவிற்கு 28-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.

12வது ஓவரில் நீல் பிராண்ட் வில்லியம் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். இதுவே வில்லியமிற்கு டெஸ்ட் போட்டியின் முதல் விக்கெட் ஆகும். பின், சுபைர் ஹம்சா களம் கண்டார். 20 ஓவர் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா அணி 58-2 என்ற கணக்கில் விளையாடியது. அடுத்த 5 ஓவர்களுக்கு பெரிதாக ரன்கள் ஏதுமில்லை. 25 ஓவர் முடிவிற்கு 63-2 என்ற கணக்கில் விளையாடியது.

26வது ஓவரில் வோன் டோன்டர் விக்கெட்டை வாக்னர் எடுத்தார். வோன் டோன்டர் 71 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின் டேவிட் பெடிங்காம் களம் இறங்கினார். 31வது ஓவரில் ஹம்சா அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். அடுத்த 10 ஓவர்களுக்கு அணிக்கு சொற்ப ரன்கள் மட்டுமே கிடைத்தது.

46வது ஓவரில் சுபைர் ஹம்சா அவுட் ஆக, கீகன் பீட்டர்சன் களம் கண்டார். 46ஓவர் முடிவிற்கு 101-4 என்ற கணக்கில் விளையாடியது. வந்த வேகத்தில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார் கீகன். பின்னர், ரூவான் டி ஸ்குவாரட் களமிறங்க, இருவரும் பார்டனர் போட்டு அணிக்கு ரன்களை குவித்தனர். 62வது ஓவரில் பெடிங்காம் அவுட் ஆனார். இவர் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின் வோன் பெர்க் களமிறங்கி டெஸ்ட் போட்டியில் தனது முதல் ரன்னை பதிவு செய்தார்.

75ஓவர் முடிவிற்கு 176-6 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. 90 ஓவர் முடிவிற்கு 220-6 என்ற கணக்கில் விளையாடியது. 92வது ஓவரில் வோன் பெர்க் விக்கெட்டை வில்லியம் வீழ்த்தி அசத்தினார். பின் டேனி களத்தைச் சந்திக்க 95வது ஓவரில் ஆட்டத்தை இழந்து சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அதன்பின், மூர்கி விளையாடினார். 97வது ஓவரில் ரூவான் டி ஸ்குவார்ட் அவுட் ஆக டேனி பேட்டர்சன் களமிறங்க, வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். அதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில், வில்லியம் 4 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும், சவுத்தி, மாட் ஹென்றி, வாக்னர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டாம் லாதம் - கான்வே ஜோடி விளையாடியது. முதல் ஓவரில் சொற்ப ரன்னில் கான்வே அவுட் ஆகி பெவிலியன் சென்றார். பின், கேன் வில்லியம்சன் களம் கண்டார். முதல் 13 ஓவருக்கு நியூசிலாந்து அணிக்கு பெரிதாக ரன்கள் கிடைக்கவில்லை. 14வது ஓவர் முதல் பந்தில் வில்லியம்சன் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 15 ஓவர் முடிவிற்கு 25-1 என்ற கணக்கில் விளையாடியது. டாம் லாதம் அணிக்காக ரன்களை குவித்தார்.

25ஓவரில் டாம் லாதம் - வில்லியம்சன் பார்ட்னர்ஷிப்பில் அணிக்கு 50 ரன்கள் கிடைத்தன. 33ஓவர் முடிவிற்கு 75-1 என்ற கணக்கில் விளையாடியது. டாம் லதாம் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீ பெடிட் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின், ரச்சின் ரவீந்திரா களம் கண்டார்.

38வது ஓவரில் வில்லியம்சன் அவுட் ஆனார். இவர் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின், வில் யாங்க் களம் கண்டார். 55 ஓவர் முடிவிற்கு 135-3 என்ற கணக்கில் விளையாடியது. ரச்சின் ரவீந்திரா மூர்கி பந்தில் போல்ட் ஆனார். பின் டாம் ப்ளண்டெல் சொற்ப ரன்னில் அவுட் ஆக, கிளன் பிலிப்ஸ் களம் காண அவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.

இவ்வாறு அடுத்தடுத்து நியூசிலாந்து அணிக்கு விக்கெட்டுகள் சரிந்தது. 62 ஓவர் முடிவிற்கு 162-6 என்ற கணக்கில் விளையாடியது. 64வது ஓவரில் வில் யாங்க் அவுட் ஆனார். இவர் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸ் வீதம் 36 ரன்கள் எடுத்தார். மாட் ஹென்றியுடன் டிம் சவுத்தி களம் கண்டார். இவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.

நியூசிலாந்து அணி வீரர்கள் 25 ரன்கள் கூட எடுக்க முடியாமல் திணறினர். அதன்படி 5 விக்கெட்டுகள் 25 ரன்களுக்கும் குறைவான விக்கெட்டுகளாகும். 68 ஓவர் முடிவிற்கு 173-8 என்ற கணக்கில் விளையாடியது. 71வது ஓவரில் மாட் ஹென்றி ரன் அவுட் ஆனார். பின், வில்லியம் ஒ ருக்கி களம் கண்டார்.

74வது ஓவரில் நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. 78வது ஓவரில் நீல் வாக்னர் அவுட் ஆக நியூசிலாந்து அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்படி 211 ரன்களை முதல் இன்னிங்ஸ்ஸில் நியூசிலாந்து அணி குவித்தது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 31 ரன்கள் பின்னடைவில் உள்ளது. இந்த போட்டியில் டானி பெடிட் 5 விக்கெட்டுகளையும், டேனி பேட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மூர்கி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையும் படிங்க: மாரத்தான் உலக சாதனையாளர் கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் பலி!

Last Updated :Feb 15, 2024, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.