ETV Bharat / entertainment

தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா.. பாராட்டிய ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ! - Aishwarya Rajinikanth new house

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 6:51 PM IST

Etv Bharat
Etv Bharat

Rajinikanth: தனது மகள் புதிதாக வாங்கியுள்ள வீட்டை ரஜினிகாந்த் சுற்றிப் பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகில் மிக முக்கிய நடிகராக ரஜினிகாந்த் அறியப்படுகிறார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை, சமீபத்தில் வெளியான லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரும், நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனது அப்பாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தனக்கென தனி வீடு ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாங்கியுள்ளார். அதன் இன்டீரியர் பணிகள் தற்போது முடிந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் வீட்டை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகிய இருவரும் சென்று பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இருவரும் சென்று வீட்டைப் பார்த்து இன்டீரியர் பணிகள் நன்றாக இருப்பதாக ஐஸ்வர்யாவின் நண்பரை பாராட்டியுள்ளனர்.

ஐஸ்வர்யா விரைவில் அந்த வீட்டில் குடியேற உள்ளதாகவும், அவருடன் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரஜினியின் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாற்றம் அறக்கட்டளை தொடங்க காரணம் என்ன? - ரகசியம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்! - MAATRAM STARTED By RAGHAVA LAWRENCE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.