ETV Bharat / bharat

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் காலஅவகாசம் கோரும் தமன்னா! என்ன காரணம்? - Mahadev Betting App Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 6:02 PM IST

Etv Bharat
Etv Bharat

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராவதில் நடிகை தமன்னா கால அவகாசம் கோரி உள்ளார்.

மும்பை: கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சட்ட விரோதமாக மகாதேவ் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட தளத்தின் துணை செயலியான (Fairplay) பேர்பிளேயில் ஒளிபரப்பியது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதர தமன்னா நோரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி மகாராஷ்டிர மாநில சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.29) நடிகை தமன்னா மகாராஷ்டிர மாநில சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராக இருந்த நிலையில், கால அவகாசம் கோரி உள்ளார். மும்பையில் தான் இல்லாத காரணத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வழங்குமாறு நடிகை தமன்னா தரப்பில் கோரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக மகாதேவ் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய நடிகர் சாஹில் கான் முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் தங்கியிருந்த சாஹில் கானை கடந்த சனிக்கிழமை கைது செய்ததாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், காவலி எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நிதி மற்றும் ரியஸ் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், மகாதேவ் சூதாட்ட நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர போலீசார் தாக்கல் செய்த முதல் கட்ட அறிக்கையின் படி மகாதேவ் சூதாட்ட செயலியை பயன்படுத்தி 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரேப் பாடகர் பாத்ஷா ஆகியோருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதில் ரேப் பாடகர் பாத்ஷா வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி போலீசார் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதேநேரம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சஞ்சய் தத் கால அவகாசம் கோரி உள்ளார்.

இதையும் படிங்க : அந்தரத்தில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்! அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய அமித் ஷா! - Amit Shah Helicopter Loses Control

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.