ETV Bharat / bharat

பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்! - LK Advani Bharat Ratna Award

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 12:51 PM IST

Updated : Apr 3, 2024, 3:12 PM IST

Etv Bharat
Etv Bharat

Bharat Ratna Award: முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானிக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

டெல்லி : முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். டெல்லியில் உள்ள எல்.கே அத்வானியின் வீட்டில் அவருக்கு பாரத் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆண்டு 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதில் நேற்று (மார்ச்.30) தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் 4 பேருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதினை வழங்கினார்.

முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், இரண்டு முறை பீகார் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார். முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகன் பிவி பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார்.

அதேபோல், சவுத்ரி சரண சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது பேரனும் ராஷ்டிரிய லோக் தன் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி பெற்று கொண்டார். தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக் கொண்டார்.

அதேபோல் இரண்டு முறை பீகார் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதிப் தன்கர், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பிரமூகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : "ஜனநாயகத்தை காக்க பேரணி"- டெல்லியில் திரண்ட இந்தியா கூட்டணி தலைவர்கள்! - INDIA Bloc Protest

Last Updated :Apr 3, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.