தமிழ்நாடு

tamil nadu

இந்த வகையான மனஅழுத்தம் உங்களுக்கு உள்ளதா...? நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்..!

By

Published : Aug 2, 2022, 6:46 PM IST

Some types of stress could be good for brain functioning

உண்மையில் சில வகையான மனஅழுத்தம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வழிவகுப்பதாக ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் உள்ளது. சில சமயங்களில் உங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போன்று உணர வைக்கிறது. ஆனால் மன அழுத்தம் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வேறுபடும் என்றும் குறைந்த மற்றும் மிதமான மன அழுத்தம் மனநோய் அபாயத்தைக் குறைக்கும் என்றும் ஒருவரது நடத்தைகளில் மாற்றத்தை கொண்டுவரும் என்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த மற்றும் மிதமான மன அழுத்தம் ஒருவரது தனிப்பட்ட மேம்பாட்டிற்கு பக்கபலமாக உள்ளன. மனச்சோர்வு, விரோத நடத்தை உள்ளிட்ட மனநல கோளாறுகளிலிருந்து காக்கிறது என்கிறார் ஜார்ஜியா பல்கலைக்கழக குடும்பம் மற்றும் நுகர்வோர் அறிவியல் இணை பேராசிரியருமான அசாஃப் ஓஷ்ரி. இதுகுறித்து அவர் கூறுகையில், "நீங்கள் மிதமான மன அழுத்தத்தைக் கொண்டிருக்கும்போது, அதனை சரிசெய்ய உங்களது மூளை எண்ணுக்கிறது. இந்த எண்ணம் ஒருவருடைய திறமையையும், செயல்திறனையும் மேம்பட செய்கிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு நீங்கள் தயாராகுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள். இப்போது உங்களுக்கு சிறிதளவு மன அழுத்தம் ஏற்படும். அதேவேளையில் உங்களது திறமையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய எண்ணுவீர்கள். புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா. எதை செய்ய தவறிவிட்டோம் என்று சிந்திப்பீர்கள். இப்படிப்பட்ட காரணிகள் உங்களது மூளை செயல்பாட்டில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

இந்த ஆய்வு 1,200-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் நடத்தப்பட்டது. இவர்களின் மன அழுத்த அளவுகள் குறித்தும், இதனால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன. இதில் சுவாரஸ்சியமான முடிவுகளை கண்டறிந்தோம். அதாவது, "கடந்த மாதத்தில் எந்த விதமான சம்பவங்களால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள், எதை உங்களால் சமாளிக்க முடியாமல் போனது என்று கேள்விகளை கேட்டோம்.

இதற்கு பெரும்பலானோர் கொடுக்கப்பட்ட இலக்குகளை முடிக்கவில்லை என்று மேலாளர் கேள்வி எழுப்பும்போதும், ஒரு வேலையை உரிய நேரத்தில் முடிக்க முடியாதபோதும் மனஅழுத்தம் ஏற்படும். இதனால் சில வாரங்களே நன்றாக போகாது என்று தெரிவித்தனர். இதே கேள்விகளை இரண்டு மாதங்களுக்கு பிறகு எழுப்பினோம். அதோடு உங்களது செயல்திறனில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டதா என்றும் கேட்டோம்.

அப்போது 80 விழுக்காட்டினர், கொடுக்கப்பட்ட இலக்குகளை எட்ட புதிய முயற்சிகளை கையாண்டதாகவும், வேலையை உரிய நேரத்தில் முடிக்க முடியாததற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்ததாகவும் தெரிவித்தனர். மீதமுள்ள 20 விழுக்காட்டினர் எந்த புதிய முயற்சிகளையும் எடுக்காமல் அதே பதிலை தெரிவித்தனர். இவர்களுக்கு வாழ்க்கை கடினமானதாக தோன்றுவதில் ஆச்சரியம் இருக்காது.

நம்மில் பெரும்பாலோருக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளன. அவை உண்மையில் நம்மை வலிமையாக்குகின்றன. அதேபோலத்தான் குறைந்த மன அழுத்தமும் மூளை செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. இவை அனைத்தும் வேலை, தேர்வு, விளையாட்டு போன்ற சிலவற்றிற்கு பொருந்தும். ஒரு தோல்வியோ, மேலாளரின் கேள்வியோ, நிராகரிப்போ உங்களின் நடத்தையிலும் செயல்திறனிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், நீண்டகால மனஅழுத்தம் வாழ்க்கையையே பாதிக்கக்கூடியது. இதுபோன்ற சூழலில் மனநல மருத்துவர்களை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க:செக்ஸ் சிறக்க ஆறு அற்புத குறிப்புகள்... என்னென்ன தெரியுமா...?

ABOUT THE AUTHOR

...view details