ETV Bharat / sukhibhava

இந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு.. ஆய்வில் வெளிவந்த உயிர்வாழ்வு விகிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 6:03 PM IST

Breast Cancer Survival Rate
Breast Cancer Survival Rate

Breast Cancer Survival Rate: இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 66.4 சதவீத பெண்கள் உயிர் வாழ்ந்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் மார்பக புற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கையின் படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்பக புற்றுநோய்: மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. 30 வயதுக்கு மேல் முதல் பிரசவம், கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல் போன்றவற்றால் மார்பக புற்றுநோய் ஏற்படும். உடல் பருமன், வயது முதிர்ச்சி, அதிகமாக மது அருந்துதல், புகைபிடித்தல், கதிர்வீச்சு பாதிப்பு, ஹார்மோன்கள் தாக்கங்கள், மற்றும் மரபணு வாயிலாகவும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

இது மட்டுமில்லாமல், முதல் கர்ப்பத்தின் போது வயது, மாத விடாய் வயது போன்றவைகளாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும். இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்குள் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1990 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 39.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 66.4 சதவீத பெண்கள் உயிர்வாழ்ந்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், மிசோரமில் 74.9 சதவீதம், அகமதாபாத்தில் 72.7 சதவீதம், திருவனந்தபுரத்தில் 69.1 சதவீதம் பேர், அதாவது சராசரியை விட உயிர் பிழைத்துள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகம்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள பாசிகாத்தில் 41.9 சதவீதம் உயிர் பிழைத்துள்ளனர். மிகக்குறைவான உயிர் பிழைப்பு விகதங்கள் உள்ளன. மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இது போலவே உள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமார், இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிர்வாழ்வோரின் எண்ணிக்கை சற்று மேம்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு, குறைந்த செலவில் மல்டிமாடலிட்டி சிகிச்சை, நோய் தடுப்பு சிகிச்சை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினர். இது குறித்த ஆய்வில், இறுதி நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வு விகிதத்தை விட ஆரம்பநிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வு விகிதம் 4.4 மடங்கு அதிகம். 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் 15 முதல் 39 வயதுடையவர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களின் உயிர்வாழ்வு விகிதம் 16 சதவீதம் குறைவு என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வு விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், அமெரிக்க போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட 90.2 சதவீதம் குறைவு என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏனென்றால் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் லோகோரேஜினல் கட்டம் அதாவது நோய் 57 சதவீதம் தீவிரமடைந்த பின்னரே சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்..! இதை செய்தால் தப்பிக்கலாம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.