தமிழ்நாடு

tamil nadu

எட்டு வைத்து நடத்தால் எட்டிப்போகும் கேன்சர்... ஆய்வில் புதிய தகவல்..

By

Published : Sep 15, 2022, 4:11 PM IST

Updated : Sep 15, 2022, 5:52 PM IST

Etv Bharatஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடி நடந்தால் கேன்சர் குறையும் - ஆய்வின் புதிய தகவல்
Etv Bharatஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடி நடந்தால் கேன்சர் குறையும் - ஆய்வின் புதிய தகவல் ()

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று வெளியிட்ட தகவலின்படி நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் அடி வைத்து நடப்பதன் மூலம் கேன்சர் மற்றும் டிமென்ஷியா போன்ற நினைவு அழிதல் ஆகிய நோய்கள் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது.

டெல்லி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது டிமென்ஷியா, இதய நோய், புற்றுநோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது என்பதைக்கண்டறிந்துள்ளனர். பவர் வாக் போன்ற வேகமான நடைப்பயிற்சியானது அதிக பலன்களைத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னணி இதழ்களான ஜமா இன்டர்னல் மெடிசின் மற்றும் ஜமா நரம்பியல் ஆகிய இதழ்களில் இந்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன. வயது வந்த 78,500 பேர் அவர்களது நடைப்பயிற்சி குறித்து டிராக்கர்களைக்கொண்டு கண்காணிக்கப்பட்டனர்.

இது சுகாதார விளைவுகளுடன் தொடர்புடைய அவர்கள் நடக்கக்கூடிய அடிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாக கண்காணிக்கும் மிகப்பெரிய ஆய்வுகள் ஆகும். இதன் மூலம் டிமென்சியா மற்றும் கேன்சர் நோய்களின் தாக்கம் குறைவது கண்டுபிடிக்கப்பட்து.

இதுகுறித்து தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் போர்ஜா டெல் போசோ குரூஸ் கூறுகையில், ‘குறைந்த பட்ச சுறுசுறுப்பான நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 3,800 அடிகள் எட்டு வைத்து நடக்கும்போது டிமென்ஷியா அபாயத்தை 25 விழுக்காடு குறைக்க முடியும் என்பதை எங்கள் ஆய்வு நிரூபிக்கிறது," என்று கூறினார்.

இதையும் படிங்க:இளஞ்சிவப்பு கற்றாழையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியம்!

Last Updated :Sep 15, 2022, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details