தமிழ்நாடு

tamil nadu

How to make a soft Idli : இட்லி-னா மல்லி பூ போல இருக்கனுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:24 PM IST

இட்லி மல்லி பூ போல தயாரிக்க அதற்கான மாவை எந்த விகிதத்தில், எப்படி அரைக்க வேண்டும்? எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தென் இந்திய மக்களின் பிரியமான உணவுகளில் ஒன்று இட்டி. அதிலும் தமிழ் நாட்டு இட்லி, சாம்பாருக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. இட்லியைச் சுடச் சுட அடுப்பில் இருந்து இறக்கிய உடன் கொஞ்சம் நாட்டுக் கோழி குழம்பு சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள் அது அவ்வளவு ருசி. சரி நீங்கள் முழுமையான சைவ விரும்பியா... தேங்காய் மற்றும் புதினா சட்னியுடன் அந்த இட்லியைச் சாப்பிடுங்கள், மெய் மறந்து போவீர்கள்.

இப்படிச் சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறும் இட்லியின் சுவையை அதன் பக்குவம் சரி இல்லை என்றால் எப்படிச் சாப்பிட்டாலும் அந்த இட்லி அவ்வளவு ருசி கொடுக்காது. பஞ்சு போல மென்மையாக இருந்தால்தான் இட்லி அதன் முழுமையான சுவையில் இருக்கும். அது ஒரு கலை என்றுகூடச் சொல்லலாம். சரி மல்லி பூ போல இட்லி செய்யும் சமையல் கலை வல்லுநராக வேண்டும் என நினைக்கிறீர்களா.? கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்Required Things
  • இட்லி அரசி
Idly Rice
  • புழுங்கள் அரிசி
Parboiled rice
  • பச்சை அரிசி
Raw rice
  • வெள்ளை சோயா
White Soya
  • உளுந்து
Vigna mungo
  • வெந்தயம்
Fenugreek

சரியான அளவில் அரசி உளுந்தை ஊற வைக்க வேண்டும்: இட்லி அரிசி 5 டம்ளர், பச்சை அரசி 1.5 டம்ளர், புழுங்கள் அரிசி 1.5 டம்ளர், வெள்ளை அல்லது கருப்பு உளுந்து 1 டம்ளர் வெள்ளை சோயா 1 டம்ளர், வெந்தையம் 2 டீ ஸ்பூன் இத்தனை பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் அதில், அரிசி வகைகளைத் தனியாகவும் மற்றவைகளை தனித்தனியாகவும் தண்ணீரில் முங்கியபடி ஊற வையுங்கள். 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மாவை அரைக்கத் தயாராகுங்கள்: ஊற வைப்பதை விட மிகப் பக்குவமாக மேற்கொள்ள வேண்டிய விஷயம் அதை அரைத்து எடுப்பதுதான். முதலில் உளுந்தைத்தான் அரைக்க வேண்டும். கிரைன்டரில் உளுந்து, வெள்ளை சோயா மற்றும் வேந்தயம் மூன்றையும் ஒன்றாக போட்டு கொஞ்சம், கொஞ்சமாக அடிக்கடி தண்ணீர் தெளித்து அரையுங்கள். மாவு நன்றாகப் பொங்கி வரும் வகையில் ஆட்டி எடுங்கள். அதனைத் தொடர்ந்து அரிசியை ஆட்டுங்கள். தண்ணீர் கூடுதலாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாவில் அதிகம் நீர் சேர்ந்தால் இட்லித் தட்டில் மாவை ஊற்றி வைக்க முடியாது.

மாவை நொதிக்க வையுங்கள்: மாவை ஆட்டி எடுத்தப் பிறகு உளுந்து மாவு மற்றும் அரசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் உப்பு சேர்த்து மாவை விட ஒரு மடங்கு பெரிய பாத்திரத்தில் நொதிப்பதற்காக எடுத்து வையுங்கள். 8 முதல் 12 மணி நேரம் வரை மாவு நொதித்தால்போதும்.

இட்லி ஊற்றுவதற்கு முன்பு :இட்லி ஊற்றுவதற்கு முன்பு நொதிக்க வைத்த மாவை எடுத்து கரண்டியால் மெதுவாகக் கலக்க வேண்டும். அதிகமாகக் கலக்கினால் மாவு நீர்த்துப்போவதுடன், விரைவில் அதிகம் புளிப்புத்தன்மை ஏற்படும். தொடர்ந்து, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து அந்த தண்ணீர் கொதித்த பிறகு இட்லித் தட்டில் மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடத்தில் இட்லி வெந்து விடும். அதன் பிறகு பாத்திரத்தைப் பொருத்து இட்லியை ஸ்பூனிலோ அல்லது தண்ணீர் தெளித்தோ எடுத்து சுடச் சுட பரிமாறிச் சாப்பிடுங்கள்.

இட்லி மாவை எப்படி பயன்படுத்தினால் நல்லது.. எப்படி பயன்படுத்தவே கூடாது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளக் கீழே இருக்கும் லிங்கில் சென்று படித்துத் தெரிந்துகொண்டு பயன்பெருங்கள்.

இதையும் படிங்க:இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் எடுத்துவச்சு யூஸ் பண்றீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க.!

ABOUT THE AUTHOR

...view details