தமிழ்நாடு

tamil nadu

2.63 கோடி ரூபாய் பண மோசடி - அரசு பள்ளி ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது!

By

Published : Sep 8, 2021, 10:32 PM IST

2-dot-3-crore-cash-fraud-case-in-vilupuram
2-dot-3-crore-cash-fraud-case-in-vilupuram ()

ஒரு லட்சம் ரூபாய் கட்டினால், பத்து மாதத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக கொடுக்கப்படும் எனக் கூறி 2.63 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகை :விழுப்புரம் மாவட்டம் பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 25 பேர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். அந்த புகாரில் ”கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்று கோடி அளவில் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் ஒன்ஸ் இன் டெக்னாலஜி என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது.

இந்நிறுவனம் பெயரில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் பத்து மாதத்தில் மாதம் ரூ.18 ஆயிரம் விதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி 2.63 கோடி ரூபாய் பண மோசடியில் அந்நிறுவனர் சக்திவேல்(எ)ஸ்ரீகாந்த் (43) காஞ்சிபுரம், கௌசல்யா (40) கோலியனூர், ராமசாமி (49) அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாதிராப்புலியூர் ஆகிய மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர்” எனப் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் கௌசல்யா மகன் கவியரசன் என்பவரையும் தேடி வருகின்றனர். இதில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களே பண ஆசையில் பணத்தை இழந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மோசடி செய்த பணத்தில் விழுப்புரம், காஞ்சிபுரத்தில் சொத்து வாங்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற 2இல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : குழந்தையின் தலையுடன் நாய் - மதுரையை அதிரவைத்த சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details