ETV Bharat / state

சவுக்கு சங்கரை கைது செய்து சென்ற கார் விபத்து.. சவுக்கு சங்கருக்கு காலில் காயம் எனத் தகவல்? - Savukku Shankar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 7:04 AM IST

Savukku Shankar
சவுக்கு சங்கர் கைது (Photo Credits To Savukku Shankar's X post)

YouTuber Savukku Shankar: தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த நிலையில், அவரை கொண்டு சென்ற கார் விபத்துக்குள்ளானது.

சவுக்கு சங்கரை கைது செய்து சென்ற கார் விபத்து (Video Credits to ETV Bharat Tamil Nadu)

கோவை: காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல்துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சவுக்கு சங்கருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காவல் வாகனத்தில் மோதிய கார் அப்பளமாக நொறுங்கி உள்ளது. காரில் வந்தவர்களும் காயம்பட்டு உள்ளனர். இதனை அடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது 294(b), 509 மற்றும் 353 இந்திய தண்டனை சட்டம் (IPC) r/w பிரிவு 4 தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 67 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.1.07 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கம் பறிமுதல்.. உள்ளாடைக்குள் தங்கப்பசை வைத்திருந்த இளம்பெண் கைது - Gold Smuggling In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.