தமிழ்நாடு

tamil nadu

சிறையில் கரும்பு அறுவடை செய்த சிறைவாசிகள்!

By

Published : Jan 8, 2020, 6:46 PM IST

Trichy central jail prisoners doing Sugarcane Harvest

திருச்சி: மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்பட்டுள்ள 40,000 கரும்புகளை அறுவடை செய்யும் பணியை சிறைவாசிகள் தொடங்கியுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள காலி இடத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அவற்றை அறுவடை செய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை பார்வையிட்ட சிறைக் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைத்து சிறைவாசிகளுக்குப் பணி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கரும்பு பயிரிடப்பட்டது. தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பொங்கல் பை திட்டத்தில் கரும்பு வழங்குவதற்காக, தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

அறுவடை செய்யும் சிறைவாசிகள்

கூடுதலாக சிறைவாசிகளுக்கு பொங்கல் தினத்தன்று சிறப்பு உணவு வழங்கப்படும். சுமார் 40,000 கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. 80 விழுக்காடு இயற்கை முறையில்தான் கரும்பு விவசாயம் செய்துள்ளோம். ஒரு சில நேரங்களில் மட்டும் பூச்சி மருந்து பயன்படுத்தினோம். 100 விழுக்காடு இயற்கை முறையில் வேளாண்மை செய்வதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். சிறைவாசிகளுக்கு விவசாயப் பணி வழங்குவதோடு, சிறைச் சந்தை மூலம் பொது மக்களுக்கும் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சிறைக் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் பேட்டி

கூடுதலாக வாழை, தென்னை, பாசிப்பயிறு, உளுந்து பயிறு, துவரை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. வெங்காயம் அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில் உள்ளது. நன்னடத்தையில் உள்ள சிறைவாசிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். அரசு தற்போது அனைத்து மத்திய சிறைகளிலும் திறந்த வெளிச் சிறைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

அதில் பணியாற்றும் நன்னடத்தை உள்ள சிறைவாசிகளுக்கு ஒருநாள் பணிபுரிந்தால், அவர்களுக்கு அந்த நாள் தண்டனை குறைத்து வழங்கப்படும். கூடுதலாக அவர்கள் பணிபுரிவதற்கு உரிய ஊதியம் அரசால் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: செயற்கை மகரந்தச் சேர்க்கை செய்யும் செங்காந்தள் விதை!

Intro:மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்பட்டுள்ள 40,000 கரும்புகளை அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.Body:திருச்சி
மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்பட்டுள்ள 40,000 கரும்புகளை அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அவற்றை அறுவடை செய்யும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பார்வையிட்ட சிறையில் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைத்து சிறைவாசிகளுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கரும்பு பயிரிடப்பட்டது. தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பை திட்டத்தில் கரும்பு வழங்குவதற்காக தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். கூடுதலாக சிறைவாசிகளுக்கு பொங்கல் தினத்தன்று சிறப்பு உணவு வழங்கப்படும். சுமார் 40,000 கரும்பு பயிரிட்டுள்ளது.
80 சதவீதம் இயற்கை முறையில்தான் விவசாயம் செய்துள்ளோம். ஒரு சில நேரங்களில் மட்டும் பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டது. 100 சதவீதம் இயற்கை முறையில் வேளாண்மை செய்வதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். சிறைவாசிகளுக்கு தோட்ட பணியில் விவசாய பணி வழங்குவதோடு, சிறை சந்தை மூலம் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக வாழை, தென்னை, பாசிப்பயறு உளுந்து பயிறு, துவரை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது வெங்காயம் அறுவடை செய்வதற்கு தயாரான நிலையில் உள்ளது. பரீட்சார்த்த முறையில் கேரட், பீட்ரூட் பயிரிடப்பட்டுள்ளது. அவை நல்ல முறையில் வந்தால் அதை முழுமையாக அதிகளவில் பயிரிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெங்காயம் அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. நல்ல நடத்தை உள்ள சிறைவாசிகள் வெளி பணிக் குழுவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு தற்போது அனைத்து மத்திய சிறைகளிலும் திறந்தவெளிச் அறைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன் மூலமாக திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பணியாற்றும் நன்னடத்தை உள்ள சிறைவாசிகளுக்கு ஒருநாள் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஒரு நாள் அவர்களுடைய தண்டனையிலிருந்து குறைப்பு வழங்கப்படும். கூடுதலாக அவர்கள் பணிபுரிவதற்கு உரிய ஊதியம் அரசால் வழங்கப்படும். சிறை வளாகத்தில் உள்ள குளங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது 20 அடிக்குக் கீழே இருந்த நீர்மட்டம் தற்போது கிணறுகளில் தரைமட்டத்தில் உள்ளது.
இதன் மூலமாக இந்த வருடம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயம் செய்யமுடியும். பண்ணை குட்டையில் 4,100 மீன் குஞ்சுகள் மறுக்கப்பட்டு வருகிறது. இவை வளர்ந்த பின்னர் சிறை சந்தை மூலம் விற்பனை செய்யப்படும். என்றார்.Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details