தமிழ்நாடு

tamil nadu

திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பலம்  வாய்ந்த கட்சி அதிமுக -அண்ணாமலை

By

Published : Jan 23, 2023, 1:42 PM IST

Updated : Jan 23, 2023, 1:51 PM IST

திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பலம் வேண்டும் - அண்ணாமலை

எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பலம் வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி என்பது மரபு தர்மத்திற்கு உட்பட்டது. இடைத்தேர்தல் எல்லாம் ஒரு கட்சியின் பலம் மற்றும் வளர்ச்சி அளவுகோல் இல்லை. கூட்டணி தர்மத்தோடுதான் நடைபெறுவது கண்ணியமாக இருக்கும்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும். மக்கள் செல்வாக்கு பெற்றவராக, மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் பணத்தை, ஆளுங்கட்சி தண்ணீர்போல் செலவிடுவார்கள்.

தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 350 கோடி ரூபாயை இடைத்தேர்தலில் செலவிட்டுள்ளார்கள். 3 திமுக அமைச்சர்களின் மாவட்டம் ஈரோடு. பணம் அதிகளவு செலவு செய்யப்படும் என்பது, தேர்தலில் பார்க்கும்போது தெரியும். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி பலம் வாய்ந்தது.

ஈரோட்டில் இருந்து அதிமுக சார்பாக, ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் உள்ள மாவட்டம் இது. அதிமுக விருப்ப மனுக்களை கொடுக்க தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்தித்துள்ளார். நிற்கக்கூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

பணபலம், படைபலம் மற்றும் அரசு அலுவலர்கள் பலத்தையும் திமுக தவறாக பயன்படுத்தும். அதை எதிர்க்கக்கூடிய ஒரே வேட்பாளர் நிற்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 13 மாதங்களில் வரப்போகிறது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படக்கூடாது. பொறுமையாக நிதானமாக நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும்.

காங்கிரஸின் மாவட்டத் தலைவரே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பாக இருக்கிறார். காங்கிரஸில் பெரிய அளவில் பிரச்னை இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன், மற்ற கட்சிகளை பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? இடைத்தேர்தல், கட்சிக்கு பலப்பரீட்சை கிடையாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும்.

போட்டி, பொறாமை என்பது கிடையாது. அறநிலையத்துறை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் பெற்றுள்ளோம். மிக்சர், முறுக்கு வாங்க அறநிலையத்துறை இல்லை. உண்டியலில் இருந்து பணம் எடுத்துள்ளார்கள். உண்டியல் பணம் அலுவலர்களின் பஜ்ஜி ,போண்டா, முறுக்காக மாறக்கூடாது. நான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் கூறட்டும்” என்றார்.

இதையும் படிங்க:காலில் விழாமல் ஓட்டு எப்படி கிடைக்கும்.? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Last Updated :Jan 23, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details