காலில் விழாமல் ஓட்டு எப்படி கிடைக்கும்.? -  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Jan 23, 2023, 7:40 AM IST

காலில் விழாமல் ஓட்டு கேட்டால் வாக்கு எப்படி கிடைக்கும்? - கே.ஏ.செங்கோட்டையன்

காலில் விழுந்து ஓட்டு கேட்காமல், கைகளை கூப்பி கேட்டால் வாக்கு எப்படி கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (ஜன.22) மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய செங்கோட்டையன், “வரும் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத்தான் என்ற நிலை உருவாகும்.

புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு

நான் தேர்தலில் போட்டியிடும்போது அனைவரின் காலில் விழுந்து ஓட்டுக் கேட்பேன். வாக்காளர் காலை தவிர வேறெதுவும் எனக்கு தெரியாது. இப்போது நிலைமை மாறி போய்விட்டது. இரு கைகளை கும்பிட்டு வாக்கு சேகரிக்கின்றனர். இவ்வாறு செய்தால் எப்படி ஓட்டு போடுவார்கள்? மக்களிடத்தில் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் என்ற ஒன்று இருக்கிறது.

இளைஞர்கள் அந்த கடமையை சரியாக செய்தால், தலையெழுத்தை மாற்ற முடியும்” என்றார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாதததை சுற்றிக்காட்டிய செங்கோட்டையன், “திமுகவினர் 10 பேர் இருந்தால் 20 போலீசார் அங்கு நிற்கின்றனர். என்ன கொடுமை நாட்டில் நடக்கிறது? அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்” என்றார். இதனையடுத்து போலீஸ் வேன் ஒன்று சைரன் ஒலியுடன் பொதுக்கூட்டம் அருகே வந்தது. இதனால் சைரனை ஒலித்து போலீசார் தொந்தரவு செய்ய வந்ததாக செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: இந்து - இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டாடும் 700 ஆண்டு பழமையான கந்தூரி விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.