தமிழ்நாடு

tamil nadu

பட்டியலின பேரூராட்சி பெண் தலைவர் மீது சாதிய பாகுபாடு காட்டுவதாகக் குற்றச்சாட்டு..

By

Published : Sep 2, 2022, 11:07 PM IST

Etv Bharat
Etv Bharat ()

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சி தலைவராக உள்ள பட்டியலின பேரூராட்சி பெண் தலைவரை தொடர்ந்து அவமதித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே பேரூராட்சி தலைவராக உள்ள பட்டியலின பெண் தலைவரை தொடர்ந்து அவமதித்து வருவதாகவும், அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் ஆலங்காயம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தமிழரசி. இவரை துணை தலைவரான மாற்று சமூகத்தை ஸ்ரீதர் என்பவர் சாதிய பாகுபாட்டு கண்ணோட்டத்துடன் தொடர்ந்து அவமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பட்டியலின பேரூராட்சி பெண் தலைவர் மீது சாதிய பாகுபாடு
பட்டியலின பேரூராட்சி பெண் தலைவர் மீது சாதிய பாகுபாடு

இதனிடையே, தற்போது அரசு சார்பில் ஆலங்காயம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி இன்று (செப்.2) மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாவிற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.

அதில் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவரையும், அதற்கு அடுத்தப்படியாக முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பெயரையும் அச்சடித்திருந்தனர். இதனைக் கண்டிக்கும் விதமாக இது குறித்து கேட்டபோது, அங்கு இருந்த இருதரப்பினரின் ஆதரவாளர்களிடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி தலைவராக உள்ள பட்டியலின பேரூராட்சி பெண் தலைவரை அவமதிப்பதாக குற்றச்சாட்டு

இதையும் படிங்க: சாதியைக் காட்டி புறக்கணித்த கிராமம்; சாதித்துக்காட்டிய அங்கன்வாடி ஆசிரியை

ABOUT THE AUTHOR

...view details