சாதியைக் காட்டி புறக்கணித்த கிராமம்; சாதித்துக்காட்டிய அங்கன்வாடி ஆசிரியை

author img

By

Published : Sep 2, 2022, 9:29 PM IST

சாதியைக் காட்டி புறக்கணித்த கிராமம் ; சாதித்து காட்டிய அங்கன்வாடி ஆசிரியை
சாதியைக் காட்டி புறக்கணித்த கிராமம் ; சாதித்து காட்டிய அங்கன்வாடி ஆசிரியை ()

தன் சாதியால் கிராமத்து மக்களால் புறக்கணிக்கப்பட்ட அங்கன்வாடி ஆசிரியை, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு சாதித்துக்காட்டிய சம்பவம் கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது.

டாவனகெரே(கர்நாடகா): பெண் ஒருவர் மாற்றத்தை யோசித்தால், எதுவும் மாறலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்கட்டாக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின், டாவனகெரே தாலுகா, ஹலே சிக்கனஹல்லி கிராமத்தைச்சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியையான லஷ்மி செய்துகாட்டியுள்ளார். இவரின் சாதியைக்காரணம் காட்டி சிக்கனஹல்லி கிராமத்து மக்கள் இவரைத்தங்களின் கிராமத்தில் அங்கன்வாடி ஆசிரியையாகப் பணியாற்ற மறுப்புத்தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அவர் பணியாற்றக் கூடாது என்பதற்காக அங்கன்வாடி மையத்தை மூன்று மாதங்கள் மூடி, அந்த ஆசிரியையை வெளியில் நிற்கவைத்தனர். இதனால் ஆசிரியை லஷ்மி பெரும் மனவேதனைக்கு உள்ளானார். இந்நிலையில், இவர் அவரகெரே அருகிலுள்ள கோஷாலா அங்கன்வாடி மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

தனக்கு நிகழ்ந்த இந்த அவமானத்தை சவாலாக எடுத்துக்கொண்ட ஆசிரியை லஷ்மி, புதிய அங்கன்வாடி மையத்தை உருவாக்கினார். தற்போது அவரின் மையத்தில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தரமான கல்வியை லஷ்மி வழங்கி வருகிறார்.

இந்த மையத்தை லஷ்மி ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். உயரிய தொழில்நுட்பத்துடன் கல்விபயிற்றுவிக்கப்படும் இந்த மையத்தில் அப்பகுதி மக்கள், தங்களின் குழந்தைகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்ப்பதற்குப் பதிலாக லஷ்மி டீச்சர் பயிற்றுவிக்கும் இந்த அங்கன்வாடி மையத்தில் சேர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மோடிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக கைதான டீஸ்டா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமீன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.