தமிழ்நாடு

tamil nadu

முல்லைப் பெரியாறு கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை!!

By

Published : Aug 5, 2022, 7:57 AM IST

முல்லைப் பெரியாறு கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை!!
முல்லைப் பெரியாறு கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை!! ()

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி: தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஆகிய மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளதால் தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் முல்லைப் பெரியார் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையானது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் கேரளப் பகுதியில் உள்ள மக்களுக்காக விடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டமானது 142 அடியை தாண்டும் போது அதிகப்படியான உபரி நீர் கேரள பகுதிகளுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆன்மிக சுற்றுலா' என்ற பெயரில் பண மோசடி - 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details