தமிழ்நாடு

tamil nadu

நெற் பயிரை அழித்துவிட்டு நெடுஞ்சாலை பணி.. தஞ்சை விவசாயிகள் போராட்டம்!

By

Published : Dec 3, 2022, 8:53 PM IST

Etv Bharat

திருவையாறு அருகே பைபாஸ் சாலை அமைக்கும் பணிக்கு நெற் பயிர்களை அழித்ததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திருவையாறு கண்டியூர் பைபாஸ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக 191 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏழு கிலோமீட்டர் நீளத்திற்கு நடுக்கடை, கண்டியூர், விளாங்குடி, தில்லைஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று, பின்னர் தற்போது சாலை அமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று, இன்னும் 30 நாள்களில் கதிர் வரும் வேளையில், மண்ணை மூடி சாலை போட்டு பயிரை அழிப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் வாங்கி சம்பா சாகுபடிகள் செய்து, கதிர் வரும் வேளையில் அதிகாரிகள் பயிர் மீது மண்ணை மூடி அதை அழித்து வருவது தங்களுடைய பிள்ளைகளை கொல்வதற்கு சமம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் கொந்தளித்த பிஆர் பாண்டியன்

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இதையும் படிங்க:4-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. 'பாடை' கட்டி கண்ணீர் மல்க ஒப்பாரி!

ABOUT THE AUTHOR

...view details