தமிழ்நாடு

tamil nadu

'சவூதி சென்ற தம்பியை மீட்டுத்தாங்க'; 10 ஆண்டுகளாக சகோதரிகளின் பாசப்போராட்டம்

By

Published : Nov 22, 2022, 5:31 PM IST

சவூதி அரேபியா சென்ற தம்பியை மீட்கக்கோரி சகோதரிகள் மனு

பிழைப்புத்தேடி சவூதி அரேபியா சென்ற தம்பியின் நிலை என்ன ஆனது? தங்களின் தம்பியை பத்திரமாக மீட்கக்கோரி சகோதரிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியைச்சேர்ந்த பழனிவேல் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு சவூதிக்கு சென்றுள்ளார். சுமார் மூன்றாண்டு காலம் வரை கடிதப் போக்குவரத்தின் மூலமாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தாருடன் எந்தவிதத் தொடர்பிலும் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

பழனிவேலை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களைத்தொடர்பு கொண்டு கேட்டபோதும் முறையான பதில் கிடைக்காததால், அவரது சகோதரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். தங்களின் தம்பியின் நிலை குறித்து யாரிடம் சொல்வது என்ற விவரம் அறியாமல் அவர்கள் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சவூதியில் பழனிவேலை பார்த்ததாக நண்பர் ஒருவர் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள தங்களின் தம்பியை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பழனிவேலின் சகோதரி பழனியம்மாள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மனு அளித்துள்ளார்.

'சவூதி சென்ற தம்பியை மீட்டுத்தாங்க'; 10 ஆண்டுகளாக சகோதரிகளின் பாசப்போராட்டம்

இதையும் படிங்க:'ஸ்ரீமதியின் மரணத்தை மறைக்க பார்க்கிறார்கள்' தாயார் செல்வி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details